உலகில் எடுத்து வைத்த முதல்
அடியும் உன்னால் தான்
எழுதப்பட்ட முதல் வரியும்
உன்னால் தான் தொடங்கின.
உறவாய் தொட்டு சாய்த்த
முதல் மடியும் நீ தான்
தொடுக்கப்பட்ட முதல் கவியும்
உன்னால் தான் தழுவியது.
அளவுக்கதிகமான அன்பு
பொழிந்தாய் நீ-என்னை
அழாமல் அரவணைந்தாய் நீ
அகிலம் போற்ற வளர்தாய் நீ
என்னை அரவணைக்கும்
முதல் தாயும் நீ -என்னை
அன்பால் அனைக்கையில்
முதல் சகோதரன் நீ
கோடை கால வெப்பதிலும்
நிழலாய் என்னை காப்பாய்
பனி மழை கள் ஆனாலும்
அனலாக வந்து சுகம் தருவாய்.
நான் தடம் வைக்க துடிப்பவன் நீ
நான் தடக்கி விழுகையில்
வருந்துபவன் நீ-என்னை
விழாமல் தாங்கிப் பிடிக்கும்
ஊன்றுகோல் நீ ஆவாய்.
நான் வாழ்வின் சிறக்க உன்
உதிரத்தை வியர்வையாய் சிந்தியவனே.
நான் சுகம் காண உன் சுக துக்கம்
மறந்து எனக்காய் வாழ்பவனே.
நான் நோய் நொடி இன்றி
சிறந்து வாழ தன் கஷ்டம் மறந்து
எனக்காய் அனைத்தையும்
இழந்தவன் என் அப்பா
என்னை தாலாட்டவே
உலகில் பிறந்தவன் நீ!!
நெஞ்சில் வைத்தே உறங்க வைப்பாய்
கை பிடித்து நடக்க வைப்பாய்.
நான் இன்று இந்தளவிற்கு
வளர்ந்து ஓர் ஆளாக மாற
தன்னையே வருந்தியவர் - என் அப்பா
பசியின்மை தூக்கமின்றி நித்தமும்
எங்களை பற்றி சிந்திப்பவர் - என் அப்பா
ஓர் சகோதரராக ஓர் நண்பராக
ஓர் வழிகாட்டியாக ஓர் துணையாக
எங்களுக்காக இருப்பவர் - என் அப்பா
இன்னும் ஒரு ஜென்மம் இருந்தாள்
அவரே என் தந்தையாக வர
வரமொன்று கேட்பேன்...!!
நன்றி - Yothika
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments