தாய்மை தமிழ் கவிதை தாய்மை (அம்மா) - Tamil Kavithai Amma

Tamil Kavithai Amma

கருவறையின் அகன்கோதை அவள்...

காதலின் வரைவிலக்கணம் அவள்...

இல்லறம் காக்கும் அடிசிற்கினியாள் அவள்...

தூக்கம் தொலைத்து

தொட்டிலில் சுமப்பவள் அவள்...


நம் துயர்துடைக்க தன்

நலம் மறந்து பணியாற்றுபவள் அவள்...

குருதிகுடித்து பிறந்த என்னை கருவறை 

என்ற அரியணையில் அமர வைத்து 

அழகு பார்த்தவள் அவள்...


ஐந்தில் அகரம் சொல்லித்தந்ததும் அவளே...

உறவின் ருசி உணரச் செய்தவளும் அவளே...

தட்டிக்கொடுப்பதும் அவளே...

தோள் தூக்கிவிடுவதும் அவளே...


அகிலத்தின் அருட்கொடையும் அவளே...

அன்பின் அடையாளமும் அவளே...

அவள் இன்றி இத்தரணி இயங்குமா...

இல்லை, இத்தரணியே

அவளால் தான் இயங்குமா...

நன்றி - அதீனா அபூ உபைதா

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments