தமிழ் கவிதை தோழி நீ என் இரண்டாம் தாயானாய் - Tamil Kavithai Thozhi

Tamil Kavithai Thozhi

தாயை இழந்து..;

தந்தையை பிரிந்து..;

தரணியிலே நானும்

தவியாய் தவித்திட்ட போது

தோழி நீயென்

இரண்டாம் தாயானாய்..!


தனிமைக்கு துணையானாய்

காயத்திற்க்கு மருந்தானாய்.;

இன்பத்தில் கை கோர்த்தாய்

துன்பத்தில் தோல் சாய்த்தாய்.;

அதனாலே நீயென்

இரண்டாம் தாயானாய்..!


தவறுகள் பலவற்றை

தயங்காமல் செய்திட்டேன்

தனிமையில் தண்டித்தாய்

மறைவினில் மன்னித்தாய்

அதனாலே நீயென்

இரண்டாம் தாயானாய்..!


என் உணர்வோடு

கலந்து விட்டாய்..!

மனதோடு உறைந்து விட்டாய்...!

அதனாலே நீயும்- என்

இரண்டாம் தாயானாய்...!


தோழி...!

நீ என் இரண்டாம்

தாயானாய்...!

நன்றி - Haseena Mohammed nahib

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

3 Comments