பொதுசன ஊடகங்களும் அவற்றின் பணிகளும் / பொறுப்புடைமைகளும் Mass Media and Their Functions / Responsibilities

Mass Media and Their Functions / Responsibilities

ஊடகங்களும் அவற்றின் பணிகளும் / பொறுப்புடைமைகளும்

பொதுவாக, ஊடகம் என்றால் கடத்துவது. காவுவது என்று தமிழில் அர்த்தம் கொள்ளப்படுகிறது. தகவல் தொடர்பில் ஊடகம் (Media) என்பது தகவல்களைச் சேமித்து வழங்கப் பயன்படுத்தப்படும் கருவியாக உள்ளது. இது பெரும்பாலும் மக்கள் ஊடகம், பொது ஊடகம், செய்தி ஊடகம் என்று பலவாறு குறிப்பிடப்படும். பொதுமக்களை மையப்படுத்தி, அம்மக்களுக்கு வேண்டிய தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து வழங்கும் சாதனங்கள் பொதுசன ஊடகங்கள் (Mass Media) எனப்படுகின்றன.

ஊடகங்கள் அச்சு ஊடகங்களாகவும், இலத்திரனியல் ஊடகங்களாகவும், இணைய ஊடகங்களாகவும் வகைப்படுத்தப்படுகின்றன. அச்சு ஊடகம் என்பது பதிப்புத்துறை சார்ந்த தகவல் வழங்கும் முறையாகும். அச்சு ஊடகங்களாக பத்திரிகை, இதழ்கள், சஞ்சிகைகள், நூல்கள் என்பவற்றினைக் குறிப்பிடலாம். இலத்திரனியல் ஊடகம் என்பது ஒலிபரப்புத்துறை. ஒளிபரப்புத்துறை, திரைப்படத்துறை, இணையம் என்பன சார்ந்து தகவல் வழங்கு முறையாகும். வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளங்கள் சினிமா என்பன இவ்வகையைச் சேர்ந்தனவாகும். அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம் ஆகியன மனித வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டன. தொலைக்காட்சி போன்ற காட்சி ஊடகங்களும் மக்களோடு இணைந்துவிட்டன. இன்று இணைய ஊடகங்கள் அனைத்து ஊடகங்களையும் ஆக்கிரமித்து உலகத்தையும் மக்களையும் தனது கைக்குள் சுருக்கிவிட்டது. விரைவான தகவல் பரிமாற்றம், நேரலையான செய்திகள், மெய்நிகர் உரு மூலமான தகவல் தொடர்பாடல் என்பன இத்தகைய பூகோளச் சுருக்கத்திற்குக் காரணமாகும்.

பண்டைக்காலத்திலும்கூட கல்வெட்டு, ஓலைச்சுவடு, செப்பேடுகள், குகைகள் முதலியவற்றில் பொதுமக்களுக்கு வேண்டிய தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டுக் கடத்தப்பட்டன. பின்னர் முரசறைதல், நெருப்பெரித்துப் புகை எழுப்புதல் மூலம் பொதுமக்களுக்குத் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன. காலப்போக்கில் பத்திரிகைகள் மூலமும் வானொலி மூலமும் அதற்குப்பின்னர் சினிமா,தொலைக்காட்சி என்பவற்றின் மூலமும் பொதுத்தகவல் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

இன்று தொழில்நுட்பம் ஊடகங்கள் செயல்படும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தின் வளர்ச்சி காரணமாகத் தகவல்கள் உலகம் பூராகவும் விரைவாகப் பல்வேறு முறைகளில் சேகரிக்கப்பட்டுச் சேமித்தும், பரப்பப்பட்டும் வருவதனைக் காணமுடிகின்றது. சமூக ஊடகங்களினதும் சமூக வலைத்தளங்களினதும் வளர்ச்சிகள் இதற்குச் சான்றாக அமைகின்றன. அறிவியலின் வளர்ச்சியால் பல்வேறு பரிமாணம் பெற்ற ஊடகத்துறையானது செய்தித்தாள், நாளேடு, வார இதழ், மாத இதழ், மாதமிருமுறை இதழ் எனவும் தொலைத்தொடர்பு ஊடகங்கள், வானொலி, தொலைக்காட்சி, பண்பலை. வலைத்தளம், இணையம் எனவும் கிளைவிட்டு வளர்ந்துள்ளன. இவ்வூடகங்கள் அன்றாட மனித வாழ்வில் தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும் முதன்மைச் சாதனங்களாகி விட்டன. தனிமனித வாழ்வைத் தவிரவும் சமூக பொருளாதார, அரசியல் மற்றும் பண்பாட்டு தளங்களிலும் ஊடகம் முக்கிய காரணியாகத் திகழ்கின்றது.

ஊடகங்கள் ஒவ்வொரு சமூகத்தினதும் பிரதிபலிப்பாகும். ஊடகம் எந்த வடிவத்திலும், அச்சிடப்பட்ட அல்லது மின்னணு முறையிலும் இருக்கலாம். இவ்வூடகங்கள் குறிப்பிட்ட சமூகத்தின் மக்களுக்கு அக்குறிப்பிட்ட சமூகமக்கள் பேசும் மொழியில் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்கின்றது. அச்சுமூக மக்களை மகிழ்விக்கின்றது. அச்சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. இதனால் ஊடகங்கள் யாவும் அவை மையப்படுத்தி இயங்கும் ஒவ்வொரு சமூகத்தினதும் குரல் ஆகும். இதனையே ஊடகங்களின் 'பேச்சு உரிமை என்ற தொடர் உணர்த்துகின்றது. ஊடகங்கள் மக்களின் குரல்களாகவும் தொழிற்படுகின்றன. மக்களின் கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும், அவர்களின் தேவைகளையும் பற்றாக்குறைகளையும் எடுத்துரைக்கும் சாதனங்களாகவும் ஊடகங்கள் இயங்குகின்றன. மக்களின் விருப்புகள் -வெறுப்புகள்,குறை - நிறைகள், அபிப்பிராயங்கள் என்பவற்றை ஊடகங்கள் செய்திகளாகவும், பேட்டிகளாகவும், தகவல்களாகவும் உரியவர்களுக்கு இடித்துரைக்கின்றன; அறிவுறுத்துகின்றன; வெளிப்படுத்துகின்றன.

பொதுசன தகவல்தொடர்புமுறையின் இன்றியமையாத அம்சமாக விளங்கும் ஊடகங்கள், ஒவ்வொரு சமூகத்தினதும் முதுகெலும்பாகவும் உள்ளன. அச்சு ஊடகங்கள் தொடக்கம் இணைய ஊடகம் (Digital media எண்ணிம ஊடகங்கள்) வரைக்கும் ஊடகங்களின் செயற்பாடுகள் யாவும் சமூகத்தோடு தொடர்புபடுவதோடு. அவை சமூகத்திலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. தற்காலத்தில் காலையில் பத்திரிகை பார்ப்பது தொடக்கம் மிடுக்கு அலைபேசியில் (Smartphone) சமூக ஊடகங்களைப் பார்வையிடுவதுவரை மனித வாழ்க்கை என்பது ஏதோ ஒருவகையில் ஊடகங்களினால் சூழப்பட்டுள்ளமை தவிர்க்கப்பட முடியாத ஒன்றாகிவிட்டது. 'அவர்கள் தொலைவில் இருக்கிறார்கள், ஆனால் நெருக்கமாக இருக்கிறார்கள்' என்ற கூற்றிற்கு ஏற்றவிதத்தில் ஊடகங்கள் தற்காலத்தில் உலகையே 'பூகோளக்கிராமம்' என்றழைக்கும் அளவிற்கு ஒரு கிராமமாகச் சுருக்கிவிட்டது. தற்கால உலகில் வளர்ச்சியடைந்துள்ள இணைய ஊடகங்கள் வாயிலாக உலகெங்கும் உள்ள மனிதர்கள் ஒருவருக்கொருவர் இலகுவாகவும், விரைவாகவும், மெய்நிகர் உருவிலும் தொடர்புகொள்கின்றனர். இதனால் உலகெங்கும் பயணித்தாலும் மனிதர்கள் தமது தெடார்பிலிருந்து துண்டிக்காத வண்ணம் ஊடகங்கள்

மனிதர்களுக்கு உதவுகின்றன. உதாரணமாக, இணைய ஊடகத்தைப் பயன்படுத்தி மிடுக்கு அலைபேசி மூலம் தகவல்களையும் செய்திகளை அறிந்துகொள்வதோடு, பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி ஆகிய ஏனைய ஊடகங்களையும் இதில் பயன்படுத்தவும்

இந்தவகையில், உலகின் பலதரப்பட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்க்கும் சமூகச் செயற்பாடுதான் ஊடகங்களின் பிரதான பணியாகும். இதனால் இவற்றைப் பரப்புரைச் சாதனம்' என்றும் அழைப்பர். ஊடகங்கள் ஒரேநேரத்தில் சில பொறிமுறைமூலம் பல மைல் தூரங்களைக் கடந்து பொதுமக்களுக்கு வேண்டிய தகவல்களையும், செய்திகளையும் வழங்கும் தொழிற்பாட்டை மேற்கொள்கின்றன. ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான பொதுமைப்பாடுடைய தகவல் பரிமாற்றம் வெகுசன ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள் மற்றும் இணையம் போன்ற பல ஊடகங்கள் மிகப்பெரியவை. இந்த அர்த்தத்தில், அவை விரைவாகவும் திறமையாகவும் தகவல்களைப் பரப்ப அனுமதிக்கின்றன. இது மக்கள் தொகையில் பெரும் பகுதியை அடைகிறது.

ஊடகங்கள் மக்களுக்காகவும் சமூகத்திற்காகவும் பணியாற்றுவதனை நோக்காகக் கொண்டுள்ளன. மக்களுக்குத் தேவைப்படும் தகவல்களையும், செய்திகளையும் வழங்குவதற்காக ஊடகங்கள் தொழிற்படுகின்றன. கிராமம் முதல் உலகம் வரையான தகவல்களை இவை வழங்குகின்றன. உலகின் ஒரு கோடியில் நடைபெறும் குறிப்பிட்டதொரு நிகழ்வை மறுகோடியில் வசிப்பவர்களினால் உடனுக்குடன் அறியவும் அது குறித்துப் பேசவும் முடிகின்றதெனில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய ஊடகங்களின் மூலமே அது சாத்தியமாகின்றது.

மேலும், ஊடகங்கள் பொதுவாக மக்களுக்கு விழிப்புணர்வையும், அறிவித்தலையும், அறிவுறுத்தலையும், எச்சரிக்கைகளையும்கூட வழங்குகின்றன. டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வு, கொரோனா போன்ற தொற்று நோய்களின் பரவல், சுனாமி, வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கைகள் ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு அறிவிப்பாகவும் எச்சரிக்கையாகவும் விடுக்கப்படுகின்றன. தனிமனிதத் தொடர்பாடல் குழுரீதியான தொடர்பாடல்மூலம் பரிமாற்றப்படும் கருத்துக்களைக்காட்டிலும் பொதுசன ஊடகங்கள் வாயிலாகத் தெரிவிக்கும் கருத்துக்கள் பொதுமைப்பாடுடைய கருத்துக்களாகவும் அவை பொதுமக்களை விரைவாகவும் சென்றடைவனவாகவும் உள்ளன. உடனடியாகவும்

ஊடகங்களின் இன்னொரு பணியாக அமைவது மக்களுக்கு மகிழ்வூட்டலை ஏற்படுத்தும் பொழுதுபோக்குச் சாதனங்களாக அமைவதாகும். ஊடகங்கள், தகவல் மற்றும் பயிற்சிக்கு மேலதிகமாக பொழுதுபோக்கையும் அதன் செயல்பாடாகக் கொண்டுள்ளன. அன்றாடம் உழைப்போடு வாழும் மனிதன் ஓய்வெடுக்கும்போது மன நிம்மதியையும் மகிழ்வையும் ஏற்படுத்தும் விதத்தில் ஊடகங்கள் மகிழ்வூட்டலை நோக்காகக் கொண்டு செயற்படுகின்றன.

மேலும் ஊடகங்கள் அறிவூட்டலையும் தனது பணியாகக் கொண்டுள்ளது. உலகிலுள்ள பொது அறிவு விடயங்களிலும் சில குறிப்பிட்ட துறைசார் விடங்களையும் மக்கள் மத்தியில் பரப்புகின்றன. கல்வியறிவு, சமுதாய அறிவு, உலகறிவு ஆகியவற்றை ஊடகங்கள் மக்களுக்குப் போதிக்கின்றன. தற்போதைய தகவல் தொழில்நுட்ப அறிவினை ஊடகங்கள் இணையத்தினூடாகப் பரப்புகின்றன.

வெகுஜன ஊடகங்கள் உலகமயமாக்கல் செயல்முறையை அதிகரித்துள்ளன. தொலைதூர தொடர்பு நாடுகளை கலாச்சார ரீதியாக நெருக்கமாகக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், விரைவாகவும் திறமையாகவும் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்கின்றன. இவைதவிர, பல்வேறு நாடுகளுக்கு இடையிலான மொழியியல், கலாச்சார மற்றும் புவியியல் தடைகளை அகற்றவும் ஊடகங்கள் உதவியுள்ளன. எடுத்துக்காட்டாக, இந்த ஊடகங்கள் வெவ்வேறு நாடுகள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் ஒருவருக்கொருவர் கலாச்சாரத்தைப் பற்றி மேலும் அறியவும் அனுமதிக்கின்றன. இதைச் செய்வதன் மூலம், ஒரு சமூகத்தைப் பொறுத்தவரை ஏற்படக்கூடிய தப்பெண்ணங்கள் குறைக்கப்படுகின்றன.

ஊடகங்களில் செய்யப்படும் விளம்பரங்கள் மூலம் உற்பத்தியாளர்களும் வர்த்தகர்களும் நுகர்வோர்களும் பயனடைகின்றனர். சேவைகள் மற்றும் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக ஊடகங்கள் உள்ளன. அதாவது அவை விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் ஒரு நன்மையாக இருக்கின்றன.

இவ்வாறு மனிதகுல நன்மைக்காக உருவாக்கப்பட்ட ஊடகங்கள் பெரும்பாலும் தற்காலத்தில் தொழில்நுட்பத்தைச் சார்ந்து இயங்குகின்றன. இன்றைய ஊடகங்கள் பெரும்பாலும் நுகர்வோர் கலாசாரத்தை மையப்படுத்திய வர்த்தக நோக்கினைக் கொண்டவையாகவும், தகவல்களைக்காட்டிலும் அளவுக்கதிகமான விளம்பரங்களையும் பரிமாற்றம் செய்வதாகவும் உள்ளன. விளம்பரம் மற்றும் வியாபர நோக்கமானது அறம், நேர்மை. துணிவு போன்ற தனிமனித உயர் குணங்களைத் துடைத்து எறிந்து வருகின்றது. அத்தோடு தனியார் ஊடகங்களின் வருகை காரணமாக ஊடகங்களுக்கிடையேயும்

இணைய நுட்ப வளர்ச்சியின் விளைவாகப் பொது ஊடகத்தின் தன்மையே, வியக்கத்தக்கவாறு மாறி உள்ளது. மரபார்ந்த செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றுக்கு இணையான தாக்கத்தை, இணையத்தின் வழியாக புது ஊடகமும் செய்யக்கூடியதாகி இருக்கிறது. படிப்பவராகவும் கேட்பவராகவும் இருந்துவந்தவர்கள். ஊடகப் பயனீட்டாளர்கள் (User) ஆகி, இப்போது அவர்களே செய்தியை வழங்குவோராகவும் தவறாக வெளியிடப்படும் செய்தியை அவ்வப்போது குறிப்பிட்டுச் சரிசெய்யவும் சாத்தியம் உருவாகியிருக்கிறது. இதனால், ஒரு முனைய ஊடகம் தற்போது இணையத்தில் 'இருமுனைய' ஊடகமாக மாறியிருக்கிறது.

இணைய ஊடகங்கள் இன்று சிறந்ததொரு பொழுதுபோக்கு ஊடகமாகவும் சமூக அந்தஸ்துநிலை ஊடகமாகவும் பாலர் முதல் வயதுவந்தோர் வரை பாவனை நிலையில் செல்வாக்குச் செலுத்துகின்றது. இணையத்தின் மூலம் முகப்புத்தகம் (Facebook). Whatsapp, Viber, Youtube, Twitter, Instagram, Skype போன்ற சமுக ஊடகங்களை மக்கள் நுகரக்கூடிய வாய்ப்பு உள்ளதுடன், தகவல்களையும் செய்திகளையும் தாமாகவே பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகளும் செய்திகள் தொடர்பான கருத்துக்கணிப்புகளைச் செய்யக்கூடிய வாய்ப்புக்களும் இணைய ஊடகங்களில் (இரு முனைய ஊடகங்களாக) உள்ளன.

அத்தோடு, இன்று எழுத்தாளர்கள் (Writers). ②क्रमाांकक्षा (Journalists) போன்றோர் தமது கருத்துக்களையும் செய்திகளையும் பதிவுகளையும் இணைய ஊடகங்களின் வழி பதிவு செய்கின்றமையினால் அவை மக்களை விரைவாகச் சென்றடைகின்றன. மேலும், செய்தி நிருபர்கள் (News reporters) தமது தகவல்களையோ அவை தொடர்பான கட்டுரைகளையோ மின்னணுத் தகவல் தொடர்புகள் மூலம் தெலைதூரங்களில் இருந்தே அனுப்புகின்றார்கள். புதிய செய்திகள் உருவாகும்போது நிகழிடத்துக்குச் (Field) செல்லும் நிருபர்கள் தகவல்களைச் சேகரித்து உடனுக்குடன் ஊடக அலுவலகத்திற்கு அனுப்புவதும், வானொலி, தொலைக்காட்சி, நிருபர்கள் களத்திலிருந்தபடியே நேரடியாகத் தகவல்களை உடனுக்குடன் மக்கள் பெறும் வகையில் தருவதும் இதன்பாற்பட்டதாகும். அத்துடன், தற்போது தகவல்களும் செய்திகளும் குருந்தகவல்களாகவும் (SMS), face book, whatsapp, viber, youtube, twitter மூலமும் உடனுக்குடன் பகிரப்படுகின்றன.

இவ்வாறு இணையத்தின் துரித வளர்ச்சி காரணமாக இன்று மக்களால் அதிகம் நுகரப்படும் ஊடகங்களாக இணைய ஊடகங்களும் இலத்திரனியல் ஊடகங்களும் அமைகின்றன. ஆயினும், சில இணைய ஊடகங்களில் தவறான, வதந்தியான. திரிபுபட்ட தகவல்களும் செய்திகளும் விரைவாகப் பரப்பப்படுகின்றன. இணைய ஊடகங்கள் 'இருமுனைய' ஊடகங்களாக உள்ளதனால் பயநர்களும் தமது கருத்துக்களையும் செய்திகளையும் பகிர்ந்து கொள்ள முடிகின்றது. இவ்வாறான சில சந்தர்ப்பங்களில் செய்தி திருபர் (News reporter) என்ற வகிபங்குநிலை பொதுமைப்படுத்தப்படுவதுடன், இணைவழி பரிமாறப்படும் தகவல்களுக்கு உரித்துடைமை கோருவதிலும் சிக்கல்கள் உள்ளன. குறிப்பிட்ட செய்திகள் இணையத்தில் விரைவாகப் பரவும்போது (வைரலாகும்போது) அச்செய்திக்குப் பொறுப்பானவர் யார்? எந்த ஊடகம் பொறுப்புடையது? போன்ற வினாக்களுக்கு விடை தேடுவதில் சிக்கல்கள் உள்ளன.

நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள் போன்ற அச்சு ஊடகங்களின் வாயிலாக இருந்த ஆழமான தேடலும், வாசிப்புப் பழக்கமும் இவ்விணைய ஊடகங்களினால் உருவாக்க முடியாது என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். விரிவான தேடலற்ற வாசகர்களை இவை உருவாக்கிக் கொண்டிருப்பதனையும் அவதானிக்கலாம். இவை ஏதோ ஒரு விதத்தில் மக்களின் அறிவையும் ஆற்றலையும் தேடலையும் மழுங்கடிக்கச் செய்வதுடன், அவர்கள் மீது மறைமுகமாக ஆக்கிரமிப்புச் செலுத்துவதன் ஊடாக சார்ந்து வாழும் இளைய தலைமுறையினரை உருவாக்குகின்றது. உண்மையில் இவை இளைய தலைமுறையினரைச் சிந்திக்க விடாத வண்ணம் செயற்படுத்துகின்றன. அதாவது சுயசிந்தனையற்ற மனிதர்களை இவை உருவாக்கிக் கொண்டிருப்பதுடன், மக்களின் எழுத்தாற்றல் திறனையும் இவை பறித்து விடுகின்றன.

மேலும், இணைய ஊடகங்களில் இன்று பாலர் முதல் வயதுவந்தோர் வரை நேரங்களை அளவுக்கதிமாகச் செலவிடும் போக்கும் காணப்படுகின்றது. மிடுக்கு அலைபேசி வாயிலாக மாணவர்கள் தமது பெரும்பாலான நேரங்களை இணையத்தின்வழி செலவிடுவதனால் பார்வைக்குறைபாடுள்ள சமூகத்தின் தோற்றத்திற்கும் இவ்விணைய ஊடகங்கள் வழிவகுக்கின்றன. மனித தொடர்பாடல் உறவுநிலையில் பாதிப்பு. அளவுக்கதிமான பணத்தைச் செலவழித்து மிடுக்கு அலைபேசிகள் வாங்குதல், இணையத்தரவு அட்டைகளைக் கொள்வனவு செய்தல், மாணவர்கள் தமக்குப் பொருத்தமற்ற பாலியல் சார்ந்த விடயங்களை நுகருதல் ஆகிய தீமையான விளைவுகளையும் இவ்விணைய ஊடகங்கள் ஏற்படுத்துகின்றன. அத்தோடு, இணைய ஊடகங்களை அதன் செயலெல்லை குறைந்த இடங்களில் (Poor coverage) பாவிக்கமுடியாமல் உள்ளது.

எனவே, இணையம் என்ற ஊடகத்தைப் பயன்படுத்துவதற்காகப் பணவிரயத்தையும் நேரவிரயத்தையும் செய்வதோடு, பார்வைக் குறைபாடுகளாலும் அவதிப்படுகின்றோம். இதனால் இணையம் நம்மை ஆக்கிரமிக்காத வகையில் நாம் எமது நேரத்தைத் திட்டமிட்டு இணைய ஊடகத்தைப் பாவிக்கப் பழகுதல் வேண்டும்.

இணைய ஊடகங்களின் அனுகூலங்கள் Advantages of Internet Media

1. விரைவான செய்திப் பரிமாற்றம்

2. உலகில் நடக்கும் எந்தவொரு செய்தியினையும் இருக்கும் இடத்திலிருந்து அறிந்து கொள்ளல்

3. நேரம் மற்றும் காலவிரயமின்மை

4. நேரலை மற்றும் காணொளி மூலம் தகவல்களை அறிவதனால் அச்சம்பவங்களோடு நேரடியாகக் காணுதல் போன்ற உணர்வு.

5. அரச தலையீடுகள் குறைவு. அச்சு ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் அரச தலையீடுகள், ஊடக ஒழுக்கங்கள் என்பன அதிகளவில் காணப்படும்.

6. எவரும் செய்தியினைத் தரவேற்றம் செய்யலாம். அதேவேளை உடனுக்குடன் கருத்துப் பரிமாற்றத்தினை மேற்கொள்ளலாம்.

இணைய ஊடகங்களின் பிரதிகூலங்கள் Effects of Internet Media

1.மக்களை ஆக்கிரமித்தல், பாவனைக்கு அடிமையாக்குதல், உறவுகளைத் தனிமைப்படுத்துதல்

2.எழுத வாசிக்கத் தெரிந்தோருக்கு மாத்திரம் பொருத்தமானது. அத்துடன் இணையத்தைக் கையாளத் தெரிந்திருத்தல் அவசியமானது.

3. இணைய வசதியினைப் பெற்றுக் கொள்வதற்கான பணத்தினை விரயம் செய்தல்

4. அனைத்துப் பகுதிகளிலும் செயற்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் குறைவு (poor coverage)

5.தொடர்ச்சியாகப் பாவிப்பதனால் கட்புலனில் பாதிப்பை ஏற்படுத்துதல் (சிறியோர் கண்ணாடி அணிதல்)

6. தேடல் மற்றும் ஆராய்ச்சிகள் அற்ற இளைய சந்ததியின் உருவாக்கத்தை ஏற்படுத்ததல்.

7. அறிவுத் தேடல், மற்றும் சிந்தனைரீதியாகத் தங்கி வாழும் சமுதாயத்தை உருவாக்குதல்.

8. செய்திகளுக்கும் தகவல்களுக்கும் உரித்துடைமைத் தன்மை இல்லை. யாரால் செய்திகள் வெளியிடப்படுகின்றன என்பது தொடர்பான சிக்கல்கள் ஏற்படுதல்.

9. பொருத்தமற்ற செய்திகளும் கலாசாரத்திற்கு ஒவ்வாத செய்திகளும் காணப்படுதல். அத்துடன் அவற்றினைப் பார்ப்பதற்கும் தூண்டப்படுதல்.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments