கண்ணனை தேடி களைத்துறங்கிய
பனித்துளியே! நீ
விழித்துக்கொள் மாய கண்ணன் காலையில்
கதிரவனாய் உதித்துவிட்டான்!
உன்னை ஆறத்தழுவி அணைத்துக்கொண்டான் !
உங்கள் இருவரின் அதீத காதலினால் மலர்ந்த கானல்
கவிதைகளை காணத்தான் முடிகிறது!
அவன் புல்லாங்குழல் இசையென காற்றில்
அக்கவிதையும் கரைந்துவிடுகிறது!
ராதா! கண்ணன் எழுதிய கானல் கவிதைகூட
உனக்கு மட்டுமே! சொந்தம்!
இது காதலின் புனிதம்! யாரும் காணாத கடவுளின் பந்தம்!
நன்றி - SANKAR
நேயர் பக்கம் இது திறமையின் தேடல் - Sl Tamil
மேலதிக விபரங்களுக்கு
👉LINK CLICK HERE👈
உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
0 Comments