அம்மா!😍 அன்பின் அர்த்தமும் நீயே!
பாசத்தின் பொருளும் நீயே!
நிலையில்லா இவ்வுலகில் நிஜமாய் வீற்றிருக்கும் என் விடிவெள்ளியும் நீயே!
கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை என்பதை உணர்த்தியவளும் நீயே!
விழியில் என்னை தாங்கும் வழித்துனையும் நீயே!
என் மனதை உடைக்காத ஓர் உயிரும் நீயே!
துயரங்கள் ஏற்று நீ தெரிடவே செய்தாய்!
உயரங்கள் நாம் காண உழைப்பையே மெய்யாய்!
சிறு வயதிலும் நினைத்ததை அனுபவித்ததில்லை!
பதிமூன்று வயதில் பள்ளிப் படிப்பை விட்டதுடன் உழைக்க ஆரம்பித்த உன் கை இன்றும் ஓயவில்லை!
உன் சமையலுக்கு ஈடு இணையும் நீயே!
அதனை வைத்து ஈடு இன்றி உழைக்கும் அன்னப்பூரணியும் நீயே!
ஒரு துயரம் தீர மரு துயரம் வர யாவையும் சலிக்காமல் சமாளித்து மீள நம் குடும்பத்தின் ஆணிவேறும் நீயே!
உடல்நிலை பாராமல் மனதைரியம் ஒன்றியே எண்ணி நடக்கும் நம் குடும்ப தேரின் அச்சாணியும் நீயே!
எங்களின் தன்னம்பிக்கை தைரியமும் நீயே!
என்றும் எங்களின் கவலைகரை கரைக்கும் உன்னதச்செல்வியும் நீயே!
என் வாழ்வின் நட்சத்திர ஒளியும் நீயே!
என்றும் முதலும் முடிவும் நீயே!💝
நன்றி - Ashwini Gunasekaran
நேயர் பக்கம் இது திறமையின் தேடல் - Sl Tamil
மேலதிக விபரங்களுக்கு
👉LINK CLICK HERE👈
உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
0 Comments