சோபகிருது வருடப் பிறப்புக் கருமம்-2023 - ரமேஷ்புரம் செங்கலடி -01 - Tamil Born in the year of Sobhakrit 2023

சோபகிருது வருடப் பிறப்புக் கருமம்-2023 - ரமேஷ்புரம் செங்கலடி -01

ஸ்ரீ சிக்கிரவோயுத சுவாமி தேவல்தானம் சோபகிருது வருடப் பிறப்புக் கருமம்-2023

மெய்யடியார்களே,

நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் எனினும் புத்தாண்டு சித்திரை 01ம் நாள் 14-04-2023 வெள்ளிக்கிழமை பி 2.03.மணிக்கு அமர பக்க தவமித் திதியில் திருவோண நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் கடக லக்கினத்தில் இப்புதிய சோபகிருது வருஷம் பிறக்கிறது. 

இப்புதிய வருடத்தில் அனைவரும் சங்கற்பித்து புண்ணிய காலத்தில் மருந்தநீர் தேய்ந்து. ஸ்தானம் பண்ணி, புத்தாடை அணிந்து, கண்ணாடி நிறைகுடம் போற மங்களப் பொருட்களைத் தரிசித்து இஸ்ட தெய்வ வழிபாடு செய்து பெற்றோர் குரு ஆகியோர்களின் ஆசி பெற்று மங்களமாய் வாழிவீர்கள்.

மருத்து நீர் தேய்க்க புண்ணி காலம் 14-04-2023 அன்று மு.ப. 10.03 மணி முதல் அன்று பி.ப. 06.03 மணி வரையும் விஷு புண்ணிய காலமாகும். இதற்குள் யாவரும் மருத்து தேய்த்துக்கொள்ளலாம்.

நோக்கி நிற்கும் திசை - கிழக்கு

தலைக்குரிய இலை - கொன்றை

பாதத்திற்குரிய இலை  - புன்கை

ஆடையின் நிறம் - வெள்ளை

ஆபரணம் - முத்து, வைரம் 

உணவு - பால்


தோஷ நட்சத்திரங்கள்

ரோகிணி, மிருகசீரிடம் 3ம், 4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1ம்.2ம்,3ம் பாதம், அத்தம், உத்தராடம் 2ம்,3ம்,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1ம், 2ம் பாதம் இவற்றில் பிறந்தோர் தவறாது மருத்துநீர் தேய்த்து ஸ்தானஞ் செய்து, இயன்ற தான தருமங்களைச் செய்து சங்கிரம தோஷத்தை நிவர்த்தி செய்யக்கடவீர்.


கை விசேஷம்

15-04-2023 சனி காலை 7.52 - 9.00 வரை

16-04-2023 ஞாயிறு காலை 7.49 - 9.48 வரை


ஆதாய விரயம்

ராசி

ஆதாயம்

விரையம்

பலன்

மேடம்

05

05

சம சுகம்

இடபம்

14

11

சுகம்

மிதுனம்

02

11

பெருநஷ்டம்

கடகம்

02

02

சம சுகம்

சிம்மம்

14

02

  அதிக லாபம்

கன்னி

02

11

பெருநஷ்டம்

துலாம்

14

11

சுகம்

விருச்சிகம்

05

05

சம சுகம்

தனுசு

08

11

நஷ்டம்

மகரம்

11

05

லாபம்

கும்பம்

11

05

லாபம்

மீனம்

08

11

நஷ்டம் 

இப்புதிய வருடத்தில் சகலருக்கும் சாந்தியும் சாமாதனமும் நிலவி அனைவரும் மங்களகரமாக வாழ இறைவன் அருள் புரிவாராக.

ஆலய பிரதம குருக்கள் சிவஶ்ரீ 

த. ஜெயக்குமார் குருக்கள்.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments