சதுர அடி என்றால் என்ன? What is a square foot?

What is a square foot

சதுர அடி என்பது, கட்டிட கட்டுமானம் அளவை முறையில் பரப்பளவைக் குறிக்கப் பயன்படும் ஒரு அலகு. கட்டிட கட்டுமானம் அளவை முறையைப் பயன்படுத்தும் ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இது பொதுவாகப் பயன்படுகிறது.

மெட்ரிக் அளவை முறைக்கு மாறிய ஐக்கிய இராச்சியம், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், இந்தியா, நேபாளம், பாக்கிஸ்தான், லைபீரியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளிலும் கூட இவ்வலகும் பயன்பாட்டில் உள்ளதைக் காணமுடிகிறது. ஒரு அடி நீளமுள்ள பக்கங்களைக் கொண்ட சதுரம் ஒன்றின் பரப்பளவே ஒரு சதுர அடி என வரைவிலக்கணம் கூறப்படுகிறது. தமிழில் இதைச் சுருக்கமாக எழுதும்போது "ச.அடி" அல்லது அடி2 எனக் குறிப்பது வழக்கம்.

அளக்கப்படுகின்ற பரப்பின் அளவைப் பொறுத்தே சதுர அடியா அல்லது வேறு அலகுகளா பயன்படும் என்பதைத் தீர்மானிக்க முடியும். நாடுகளின் பரப்பளவு போன்ற மிகப்பெரிய அளவுகளும், வயல்கள் போன்ற பெரிய நிலத் துண்டுகளும் சதுர அடியிலும் கூடிய அளவு கொண்ட அலகுகளினால் (உதாரணமாக சதுர மைல், ஏக்கர் போன்றவை) அளக்கப்படுகின்றன. மிகச் சிறிய பரப்புகள் சதுர அங்குலத்தில் அளக்கப்படுகின்றன. இவற்றுக்கு இடைப்பட்ட அளவுகளே சதுர அடியில் அளக்கப்படுகின்றன. வீடுகள், கட்டிடங்கள் போன்றவற்றின் தளப்பரப்புக்கள் சதுர அடியில் அளக்கப்படும் பரப்புகளுக்கான எடுத்துக்காட்டுகள்.

கட்டுமானத்துறையில், இம்பீரியல் முறையைப் பயன்படுத்தும் நாடுகளில், சுவருக்குச் சாந்து பூசுதல், நிலத்துக்குக் கல்பதித்தல், தளவிரிப்புக்கள் போன்றவை சதுர அடியிலேயே அளக்கப்படுகின்றன. இவற்றுக்கான செலவுகளைக் கணக்கிடும்போதும் சதுர அடிக்கு இவ்வளவு என்ற அடிப்படையிலேயே கணக்கிடப்படுகின்றன.

1 சதுர அடி என்றால் என்ன? what is the meaning of 1 square foot?

சதுர அடி என்பது பரப்பளவை அளவிடும் அலகு.

1 அடி = 12 அங்குலம்.

1 அடி X 1 அடி = 1 சதுர அடி

10 அடி X 1 அடி = 10 சதுர அடி

10 அடி X 5 அடி = 50 சதுர அடி

10 அடி X 10 அடி = 100 சதுர அடி

அலகு மாற்றம் - Unit Conversion

1 சதுர அடி = 144 சதுர அங்குலம்.

1 சதுர அடி = 1/9 சதுர யார்.

1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்.

1 சதுர அடி = 0.000022956341 ஏக்கர் 

1 சதுர அடி = 0.000009290304 ஹெக்டேர் 

1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர் 

1 சதுர அடி = 144.0000002229 சதுர அங்குலம் 

1 சதுர அடி = 0.111111106982 சதுர கெஜம் 

1 சதுர அடி = 929.0304014422 சதுர சென்டிமீட்டர்கள்

1 சதுர அடி = 9.290304 சதுர டெசிமீட்டர்கள் 

1 சதுர அடி = 0.00000009290304 சதுர கிலோமீட்டர்கள் 

1 சதுர அடி = 144003673094580 சதுர மைக்ரோ இன்ச்கள் 

1 சதுர அடி = 92903040000 சதுர மைக்ரோமீட்டர்கள் 

1 சதுர அடி = 0.0000000358701 சதுர மைல்

1 சதுர அடி = 92903.04 சதுர மில்லிமீட்டர்கள் 



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments