தமிழ் ஜாதி கவிதை Tamil Caste - நேயர் பக்கம்

தமிழ் ஜாதி கவிதை

தமிழ் ஜாதி நமது!

வென்றிடும் வேங்கை ஜாதி நமது!

தமிழ் ஜாதி நமது!

வென்றிடும் வேங்கை ஜாதி நமது!

வட இந்தியர் வாழ்வார்! மலையாளிகள் வாழ்வார்!

மராத்தியர் வாழ்வார்! தெலுங்காரரும் வாழ்வார்!

எல்லாம் மக்களும் இணைந்த தமிழகம் நமதே, நமதே, நமதே டா!

தமிழ் ஜாதி நமது!

வென்றிடும் வேங்கை ஜாதி நமது!  


ஊர்கள் வேறானாலும் நமது எண்ணம் ஒன்றே அண்ணா!

மொழிகள் வேறு இருந்தாலும் நமது மொழி தமிழ் அண்ணா! 

யார் வந்தாலும், யார் போனாலும்

வாழவைத்திடும் தமிழகம் அண்ணா!                                                                      

தமிழ் ஜாதி நமது! 

வென்றிடும் வேங்கை ஜாதி நமது! 


ராமாயணம் பிறந்தது தேரழுந்தூரில்!

சீறாப்புராணம் பிறந்தது ஏட்டயபுரத்தில்!

இந்த படைப்புகள் யாவும் இல்லையென்றால் நமது கலாச்சாரம் பெரிய பூஜ்ஜியம்!

தமிழ் ஜாதி நமது!

வென்றிடும் வேங்கை ஜாதி நமது! 


வைகை அணை எவரது? ஆழியார் அணை எவரது?

மேட்டூர் அணை எவரது? கரிகாலனின் கல்லணை எவரது?

எல்லாம் வளங்களும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழும்

தமிழ் அன்னையின் செல்ல குழந்தைகள் 72 கோடி பேருக்கு!                       

 தமிழ் ஜாதி நமது! 

வென்றிடும் வேங்கை ஜாதி நமது!  


சிப்பாய் கலகம் வேலூரில் நடத்தி சிங்கங்களாய் கர்ஜித்தோமே

வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்தி மாபெரும் புரட்சி செய்தோமே!

வந்தே மாதரம்! ஜெய வந்தே மாதரம்!

ஜல்லிக்கட்டாலே மல்லுக்கட்டி உலகை திரும்பி பார்க்க செய்தோமே!

தேச பக்தியில் தமிழனுக்கு ஈடு இணையில்லை என உலகிற்கு நிரூபித்தோமே!

தமிழ் ஜாதி நமது!

வென்றிடும் வேங்கை ஜாதி நமது!  


வள்ளுவன் தந்த திருக்குறளை உலகத்திற்கு அர்பணித்தோமே!

சங்க தமிழை மதுரையில் உருவாக்கி உலகிற்கு அர்பணித்தோமே! 

சண்டை போட்டு கொண்டு தமிழ் ஜாதியை அசிங்கப்படுத்தவேண்டாம்!

நான்கு பேரிடம் நம் ஜாதி பெயர் கேலி கிண்டல் ஆக்கவேண்டாம்!

தமிழ் ஜாதி நமது!

வென்றிடும் வேங்கை ஜாதி நமது! 

நன்றி - M.மனோஜ் குமார்


நேயர் பக்கம் இது திறமையின் தேடல் - Sl Tamil

மேலதிக விபரங்களுக்கு

👉LINK CLICK HERE👈

உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments