படிப்பே உலகமில்லை பிழைக்க ஆயிரம் வழிகள் உள்ளது
இயல் இசை நாடகம் விளையாட்டு என பல திறமைகள் உள்ளது
குழந்தைகளின் எதிர்காலம் பெற்றோர்கள் கையில் உள்ளது
அவர்கள் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர்களிடம் உள்ளது.
நாட்டின் முதல் பிரதமர் நேருஜி குழந்தைகளை மிகவும் விரும்பினார்
குழந்தைகளே நாட்டின் எதிர்காலம் என அவர் சொன்னார்
மக்கட்பேறு தான் பெரிய சொத்து என வள்ளுவர் சொன்னார்
நல்ல குழந்தைகளே பெற்றோர்களின் பெரிய சொத்து என விளக்கமாக சொன்னார்
படித்த படிப்புக்கும் பார்க்கும் வேலைக்கும் ஒன்றும் சம்மந்தமே இல்லை
பாதி பெற்றோர்களுக்கு இன்னும் இது தெரியவில்லை
இப்படி இருப்பதால் தான் பாதி குழந்தைகள் ஜொலிப்பதில்லை
இதனால் நாட்டை வழிநடத்த நல்ல தலைவர்கள் கிடைப்பதில்லை
படிப்பில் கவனமில்லையா? குழந்தைகளை பெற்றோர்கள் திட்டக்கூடாது
அவர்களை பெற்றோர்கள் பயமுறுத்தி மிரட்டி மோசமாக அடிக்க கூடாது
படிப்பில் கவனம் வர அறிவு வளர வேறு வழி கண்டறிய வேண்டும்
ஒளிந்திருக்கும் திறமையை கண்டுபிடித்து வெளிப்படுத்த வேண்டும்
குழந்தைகளுக்கு பயம் வந்தால் தைரியம் தர வேண்டும்
மன அழுத்தம் அவர்களுக்கு வந்தால் கட்டிப்பிடித்து கொஞ்சி தாலாட்ட வேண்டும்
கோபம் வெறுப்பு அவர்களுக்கு வந்தால் மனதை அமைதி படுத்த வேண்டும்
திறமைகளை வளர்க்க அவர்களை இன்னும் ஊக்கவிக்க வேண்டும்
நன்றி - M.மனோஜ் குமார்
நேயர் பக்கம் இது திறமையின் தேடல் - Sl Tamil
மேலதிக விபரங்களுக்கு
👉LINK CLICK HERE👈
உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
0 Comments