உலக உணவு தினம் உணவே மருந்து மருந்தே உணவு - World Food Day

உலக உணவு தினம் உணவே மருந்து மருந்தே உணவு - World Food Day

உணவே மருந்து மருந்தே உணவு

பிறந்த குழந்தைக்கு முதல் உணவு தாய்ப்பால்

வளர்ந்த குழந்தைக்கு இரண்டாவது உணவு பசும் பால் 

இறந்த மனிதனுக்கு கடைசி உணவு உடன்பால்

இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு, 

கொளுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு

பசியறிந்து  ருசித்து அரை வயிறு உண்டால்


உணவே உடலுக்கு மருந்து 

பசியறிந்து  ருசித்து முழு வயிறு உண்டால்


மருந்தே உடலுக்கு உணவு

அஜீரணமும், மலச்சிக்கலும் ஆதிநோய்கள் 

பின்னால் வருபவை மீதி நோய்கள்.


ஒருவேளை உண்பான் யோகி; 

இருவேளை உண்பான் போகி; 

மூன்று வேளை உண்பான் ரோகி; 

நாலுவேளை உண்பான் நீரழிவு ரோகி!


மற்றவர்கள் உண்ண கொடுப்பதில் நெஞ்சு  வஞ்சமுமில்லை  

உண்டு கொழுத்தவனுக்கு உண்ணும்  உணவு பஞ்சமுமில்லை

மற்றவர்கள் உண்ண கொடுப்பதில் நெஞ்சு கொஞ்சமுமில்லை

உழைத்த உழவனுக்கு உண்ண கஞ்சி  மிச்சமுமில்லை 


சில நாட்டில் பசிக்கு  உணவிருந்தும் 

உணவு சாப்பிட கிடைக்காமல் அல்லாடுகிறார்கள் 

பல நாட்டில் ருசிக்கு உணவிருந்தும் 

உணவு சாப்பிட முடியாமல்  அல்லாடுகிறார்கள்


வாழ்க்கை யாரோடு 

மாத்திரை இல்லா 

பிரபஞ்ச வாழ்க்கையோடு

தரமான உணவோடு 

அளவான உணவோடு  

காக்கைகளை போல அழைத்து 

உண்டு வாழுங்கள் அன்போடு


அறம் செய்ய விரும்பு 

ஆறுவது சினம்

அவ்வை சொன்னது 

கடைப்பிடித்து வாழ்வோம்


காரவகைகளில் சமையலுக்கு பயன்படுத்த முடியாத காரவகைகள் 

ஓங்காரம் ரீங்காரம் அகங்காரம், அலங்காரம், 

சிலப்பதிகாரம், சௌக்காரம், வெண்காரம், 

கடிகாரம், படிகாரம் அதிகாரம் தத்தகாரம்

நன்றி - பிரபஞ்சதாசன் சத்யா


நேயர் பக்கம் இது திறமையின் தேடல் - Sl Tamil

மேலதிக விபரங்களுக்கு

👉LINK CLICK HERE👈

உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments