கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை விதை
விதைகள் இறந்தப்பின்
மண்ணிற்கு வேலையில்லை
உன்கனவுகளை துறந்தப்பின்
உன்வாழ்விற்கு அர்தமில்லை
கனவுகளும் விதைப்போல்
முயற்சிகள்கொண்டு வெல்லத்துடிக்கும்
மனங்களே கனியாகிய
வெற்றிகளை சுவைக்க முடியும்
இரவில் கண்டுவிட்டு
பகலில் ஏதோ காட்சியாக போய்விட்டால்
இன்றைய அற்புத கண்டுப்பிடிப்புகள்
அன்று பிரம்மையாய் மறைந்திருக்கும்
கனவு காண்பது தவறல்ல
அதை அடைய முயற்சிக்காமல்
காலத்தின் சுவர்களில்
அதன்மீது பழிச்சொல்லி
உன்னை நீ ஏமாத்திக்கொள்வதே
அறியாமையின் வழித்திறக்கும்
திருவுக்கோலாகிவிடுகிறது
அனைத்தும் அறிந்தவனும்
இங்கே நதியின் துளியே
கற்றலுக்கு வயதில்லை என்பதுப்போல்
முயற்சிக்கும் வரியில்லை
ஐந்தில் வளைந்தது ஐம்பதில் வளையுமா
என்று வாய்ச்சொல்லால் பேசிக்கொண்டு
முயற்சியின் வாயுலைப் பூட்டிவிடுகிறோம்
முயற்சித்துப் பார்த்தால் தான் தெரியும்
அகவை ஐந்தோ ஐம்பதோ
முயற்சிக்கு வயது தடையில்லையென்பதை.
நன்றி - மா உமாமகேஸ்வரி
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
0 Comments