தமிழ் கவிதை வாழ்க்கை (Tamil Kavithai Life)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை வாழ்க்கை

தமிழ் கவிதை வாழ்க்கை

கருவில் விழுந்த போது - என்னைப் பார்த்து

களிப்புற்ற உறவெல்லாம் - நான்

புவிதனில் விழுந்த போது

தயங்கியே அணைத்துக் கொண்டது

நான் பெண்ணாக பிறந்த காரணத்தால்..!!


என் பெண்மையானது - ஆனந்தமாய்

மலர்ந்த போது

என்னை மறைத்து வைத்த மூலையிலே

மடியச் செய்தார்கள்

என் ஒட்டுமொத்த சுதந்திரத்தையும்..!!


சிலரின் கேளிக்கை சொல் கேட்டு

சிலரின் கண்களின் பார்வைக் கண்டு

ஈரேழு உலகமெல்லாம்

ஈரமாய் போனது போல்

குருதித்துளிகள் கண்ணீராய் பாய்கிறதே..!!


வாடகை வட்டிக்கும்

வறுமைக்கும் சிக்கிக் கொண்டு

அவமானங்கள் பல சந்தித்து

ஆயிரம் கணக்கான உயிரிழப்புகளை - கண்டு

எனது விழி நீரானது வற்றிப் போனதே..!!


தடுமாறிப் போனதால் - என்

தடமும் மாறிப் போனது

தலைக் குனிந்து நிற்கின்றேன்

இப்படி பட்ட வாழ்க்கையை 

வாழ்ந்துக் கொண்டிருப்பதை எண்ணி..!!

நன்றி - லோ.கிஷாந்தனி

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம் 



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments