கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை காதல்
விழிகளில் புகுந்து இதயத்தில் கலந்த உறவு காதல்!..
காதல் உறவு நீயின்றி நானில்லை என்னும் உறுதி
நன்மை தீமை எது வந்த போதும் அனைத்தையும் கடந்து உனக்காக
நான் எனக்காக நீ என்று வாழும் வாழ்க்கை
இதில் அன்னை தந்தைக்கு முதல் மரியாதை கொடுத்து வாழ்ந்தால்
இறைவனின் ஆசி விரைவில் கிட்டும்
எப்பொருள் வெல்லும் உந்தன் அன்பினில்
கருப்பொருள் ஆவது உண்மை அன்போ
விழியினில் கலந்த அக்கணமே என்னில் நிறைந்தாய்
என்னுள் எழுந்த சிற்பமே அழியாத காவியமே
தேடி கிடைத்த புதையலும் நீயே தேடாமல்
என்னுள் உயிர் மூச்சும் நீயே
கணக்காய் வடித்த அழியா காவியமே
ஈரவிழி பரவும் வானவில் ஒளியானேன்
நாளம் நிரப்பும் ஒலிக்குறிப்பாய் நாளும்
விண்ணும் வியந்திடும் மண்ணின் ஆகாயம்
கரையும் தியதியில் வளர்பிறை நீயானாய்
கண்ணில் நிறைவதே காதலுக்கு அழகு
என்னுள் நாளும் உயிராய் வாழ்வாய்....
நன்றி - சு. ஜெயபாண்டி
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
.jpg)




0 Comments