தமிழ் கவிதை மெய் இன்பம் (Tamil Kavithai Inbam)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை மெய் இன்பம்

தமிழ் கவிதை மெய் இன்பம்

கிழக்கே கதிரவன் உதித்தது

 கீழ்வானம் சிவந்தது போனது

சில்லென்று காற்று அடித்தது

 சிட்டுமேனி சிலிர்த்தது நின்றது


தித்திக்கும் பழரசமது பருக

   திகட்டாது இன்பம் தந்தது

கானகத்துநடுவே மயிலின் நடனம்

   கண்ணுக்கு விருந்தாய் அமைந்தது


பூத்துக்குழுங்கும் மலர்களின் மணம்

   பேதை மனதை மயக்கியது

கொட்டும் அருவி ஓசை

   கூவும் குயிலின் ஓசை


கேட்க காது இனித்தது

எல்லா புலனும் இன்புறவே 

   எந்தன் மனமது கூத்தாடியது 

ஆனந்தக் கூத்தாடியது !...


இயற்க்கை யார்க்கும் தந்த 

   இது மெய் இன்பமே!

நன்றி - அன்னம்

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம் 



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments