கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
அன்புள்ள "அப்பா" (வுக்கு) உன் அன்பு மகளின் சிறு சமர்ப்பணம்.
"அப்பா"என்ற வார்த்தையைக் கேட்டவுடன் மெய் சிலிர்க்கிறது!!..
உன் பாசம் அம்மாவின் பாசத்தை விட இரு மடங்கு அதிகம்!!!....
எங்களுக்காக இரவு, பகல் பாராது உழைத்தாய்!!
நல்ல நாளிலும் கிழிந்த ஆடையே அணிந்திருப்பாய்!!!.
உன்னோடு இருந்த அந்த அழகிய நாட்களில்
எனக்குள் எந்த கவலைகளும் இல்லை!!.. ஆனால்..
இப்போது எங்கே என் "அப்பா"என்ற கவலை மட்டுமே
எனக்குள் இருக்கிறது!!!...இனி உன்னை எங்கே?
எப்போது? காண்பேன்!!... எப்படி உன்னைத் தொட்டு மகிழ்வேன்?
உன் அப்பா எங்கே என்று கேட்டால்
பதில் சொல்ல முடியாமல் நின்றுவிடுகிறேன்....!(அந்தநேரத்தில்)
அதேபோல் யாராவது '"அப்பா"' என்று கூறும் அந்த நேரத்தில்
ஏனோ தெரியவில்லை கண்கள் கலங்கிவிடுகின்றன!
இதுவரை நான் உன்னிடம் எதுவும் கேட்டதில்லை!
ஆனால் இப்போது ஒன்றை மட்டும் கேட்கிறேன்!
"வாய்ப்பிருந்தால் வந்து போ"-அப்பா
நன்றி - ஜோதிகா
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
0 Comments