மனித மூளையின் தொழிற்பாடு (Structure of the Human Brain)

மனித மூளையின் கட்டமைப்பு

அதிசிய மூளையின் அற்புதமான அமைப்பு

இந்த நவீன உலகில் பல ஆராய்ச்சிகள் மூலம் பல கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இன்று வரை ஆராய்ச்சிகள் மூலம் முழுமையாக அறிந்து கொள்ள முடியாத உறுப்பு நம் மனித உடலில் உள்ளது. அந்த அங்கத்தால் தான் முழு உடலும் சீராக இயங்குகின்றது. அதுதான் நம் மூளை.நமது மூளையை ஒரு கணணியாக கருதினால் கணணியில் புகைப்படங்கள், காணொளிகள் என்பதை எப்படி சேமிப்போம் அதே போல் நம் மூளையிலும் நாம் பார்ப்பது ,படிப்பது, கேட்பது என்று எல்லாவற்றையும் சேமித்து வைக்க முடியும்.இவை இரண்டிற்கும் சிறு வித்தியாசம்தான் உள்ளது. நம் மூளையின் மொத்த சேமிப்பை காணொளி வடிவம் செய்து அதை பார்த்து முடிப்பதற்கு கிட்டத்தட்ட 300 வருடங்கள் தேவைப்படுகின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். மூளை மண்டையோட்டு அறையில் அமைந்துள்ளது. மனித மூளையானது உடல் நிரையில் 1/ 50 ஆகவுள்ளது. இங்கு நூறு பில்லியனுக்கும் அதிகமான நியுரான்கள் காணப்படும். இந்த நரம்பு காலங்களுக்கு மேலதிகமாக நியுரோக்கிளியா  எனப்படும் சிரத்தலடைந்த கலம் மூளையில் காணப்படும். மூளை பிரதானமாக மூன்று பகுதிகளை கொண்டது. அவையான மூளையம், மூளி, நீள்வளையமையவிழையம் ஆகும்.மூளையத்தின் வெளிப்புறமாக நரம்பு கலத்தின் கலவுடல் காணப்படுகிறது. இது சாம்பல் நிறமானது. இக்கலவுடல்  நரைநிறச்சடப்பொருள் என அழைக்கப்படுகிறது. அதற்கு உட்புறமாக நரம்பு நார் காணப்படுகிறது.நரம்பு நார் வெள்ளை நிறமான மயலின் கவசத்தைக் கொண்டிருப்பதால் வெண்சடப்பொருள் என அழைக்கப்படுகிறது.


மூளையம்

மனித மூளையின் விருத்தியடைந்த பகுதி மூளையம் ஆகும்.இது ஆழமான மத்திய நெடுங்கோட்டு பிளவு மூலம் வலது இடது மூளைய அரைக்கோளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மூளையத்தின் மேற்பரப்பு மடிப்புகளை கொண்டது. இதனால் மூளையத்தின் மேற்பரப்பளவு அதிகரிக்கின்றது.மூளையத்தின் வலது அறைக்கோலமானது உடலில் இடது புறத்தை இடது அறை கோலமானது உடலில் வலது புறத்தை கட்டுப்படுத்துகின்றது.


மூளையத்தின் தொழில்கள்

வாங்கிகளில் இருந்த வரும் கனத்தாக்கங்களை பெறுவதும் அக்கணத் தாக்கங்களினால் கிடைக்கப்பெறும் தகவல்களை விளங்கிக் கொள்வதும் அத்தகவல்களை களஞ்சியப்படுத்தவும் செய்கிறது.

வலி , பார்வை , சூடு, பேச்சு, சுவை, மனம் போன்ற புலன்களை உருவாக்கும்.

கற்றல் , சிந்தனை,  நுண்ணறிவு போன்ற உயர் உளச்செயற்பாடுகளை மேற்கொள்ளும்.

இச்சைவழித் தசை சுருக்கத்தைக் கட்டுப்படுத்தும்.


மூளி

மூளையத்திற்கு பின்புறமாக நேராக கீழாக மூளி அமைந்துள்ளது. அது இரண்டும் அரைக்கோளங்களைக் கொண்டது.அதன் வெளிப்புறமாக நரை சடப்பொருளும் ஆழமாக வெண்சடப்பொருளும் உண்டு.

மூளியின் தொழில்

உடல் சமநிலையைப் பேணும்.

இச்சைவழிச் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும்.

உடல் அசைவுகளை சரியான முறையில் மேற்கொள்ள பங்களிப்புச் செய்யும்.


நீள்வளையமையவிழையம்

மூளிக்குப் கீழ்புறமாக நீள்வளையமையவிழையம் அமைந்துள்ளது. இது அங்கி ஒன்றின் உயிர்ப்பான செயன்முறைகளை கட்டுப்படுத்தும் முக்கியமான பகுதியாகும்.

நீள்வளையமையவிழையத்தின் தொழில்

இதயத்துடிப்பு வேகத்தை கட்டுப்படுத்தும்.

சுவாசத்தை கட்டுப்படுத்தும்.

வாந்தி, இருமல், விழுங்குகள் போன்ற தெறிவினைச் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும்.


முண்ணான்

மூளையின்  நீள்வளையமையவிழையத்தை தொடர்ந்து முண்ணான்  ஆரம்பிக்கிறது. முள்ளந்தண்டின் ஊடாக பயணிக்கும் உருளை வடிவான நரம்புக்கட்டமைப்பாகும்.முண்ணானின் வெளிப்புறமாக வெண் சடப்பொருளும் உட்புறமாக நரைச்சடப் பொருளும் காணப்படுகிறது. முள்ளந்தண்டின் இரு பக்கங்களிலிருந்தும் சமச்சீராக நரம்புகள் சோடியாக ஆரம்பிக்கின்றது.முதுகுப்புறவேர் ஆரம்பிக்கும் இடத்தில் புலன் நரம்புக்கலத்தின் கலவுடன் ஒன்று சேர்வதனால் உருவாகும் திரட்டு காணப்படும். இது முதுகுப்புறத்திரட்டு என அழைக்கப்படும்.

ஆணின் மூளை பொதுவாக சுமார் 1400 கிராம் இடையும் பெண்ணின் மூளை சுமார் 1200 கிராம் இடையும் கொண்டது.சாதாரணமான மனித மூளை 140 மில்லி மீட்டர் அகலமும் 160 மில்லி மீட்டர் நீளமும் 93 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது. 60% கொழுப்பானது மூலையில் காணப்படுகின்றது.ஒரு மனிதனின் பதினெட்டாவது வயதில் மூளையானது வளர்வதை நிறுத்திக் கொள்கின்றது.பிறந்த குழந்தையின் மூளையின் சுமார் 350 கிராம் இலிருந்து 400 கிராம் வரையும் இருக்கும். குழந்தை பிறந்த முதல் ஓர் ஆண்டின் மூளை மூன்று மடங்கு பெரிதாக வளரும். வலது பக்க மூளை உடலில் இடப்பகுதியையும் இடது பக்க மூளை உடலில் வலப்பகுதியையும் கட்டுப்படுத்துகின்றன.

மனித மூளையில் ஒவ்வொரு முறையும் நினைவுகள் சேமிக்கப்படும் போது ஒரு புதிய இணைப்பு மூளையில் உருவாகின்றது. இந்த இணைப்பு உருவாகவில்லை என்றால் அந்த நினைவுகள் சேமிக்கப்படமாட்டாது. இந்த இணைப்பில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் தான் ஞாபக மறதி ஏற்படுகின்றது. நம் உடலில் உள்ள மொத்த ஒக்சிசனில் 20% ஒக்சிஙனை மூளையே எடுக்கின்றது.மேலும் நாம் காலையில் எழும் போது மூளையில் பிறப்பிக்கப்படும் மின்சாரத்தை வைத்து ஒரு மின்குமிழை எரிய வைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். நாம் புதிதா ஏதாவது கற்றுக்கொள்ளும்போது நம் மூளையின் வடிவத்தில் மாற்றம் ஏற்படுகின்றது.

ஒரு மணி நேரத்தில் 450 கிலோமீட்டர் வேகத்தில் மூளையினால் தகவல் பரிமாற்றம் நடைபெறுகின்றது.மூளையானது பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும் அதிக சிந்தனை கொண்டதாகவும் இருக்கும்.இன்னும் ஒரு சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் கனவு தன் மூளை உடற்பயிற்சி என ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றார்கள். காலை உணவு மிக முக்கியமாக கருதப்படுவதற்கு காரணம் உள்ளது. காலை உணவை தவிர்ப்பதால் ரத்தத்தின் சர்க்கரை அளவு குறைகின்றது. இது மூளையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதனை சரி செய்வதற்கு மேல்லோட்டம் அல்லது நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.மேலும் மாசு நிறைந்த காற்றை சுவாசிக்கும் போது நமக்கு தேவையான ஒக்சிசன்னை நாம் பெறுவதில் இருந்து தடை செய்கின்றது. மூளைக்கு ஒக்சிசன் செல்லாவிட்டால் மூளை பாதிப்படைவதாக கூறப்படுகின்றது.  மூளை இப்போது மட்டுமல்ல எப்போதும் அதிசயம். அதிசயமான மூளையை உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறுவோம்

நன்றி



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments