வாழ நினைத்து வாழ்க்கை இழந்த கதை. - Tamil Story "The story of losing life trying to live"

வாழ நினைத்து வாழ்க்கை இழந்த கதை.

வாழ நினைத்து வாழ்க்கை இழந்த கதையின் சுருக்கம்

காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவன் மனைவி, அடையாளத்தை இழந்து இன்று தன் பிள்ளைகளின் வாழ்கைகாக போராடிய நிலை...


வாழ நினைத்து வாழ்க்கை இழந்த கதையின் விளக்கம்.

இக்கதையில் கணவன் ஒரு கேரள நாட்டைச் சேர்ந்தவர் மனைவி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இருவரும் இணைந்து குடும்பத்தை நடத்தும் பொழுது ஏற்படும் பிரச்சனைகள் சமூகம் கொடுக்கும் தொந்தரவுகள் இக்கதையில் காண்போம்.


கதையின் விளக்கம்.

இந்தக் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு பிறந்த குழந்தைகள். மூன்று பெண் குழந்தைகளும் இரண்டு ஆண் குழந்தைகள் இவர்கள் மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்ததால் இவர்கள் யாரையும் நம்பி இல்லாமல் சுயமாக வேலை செய்து வாழ்க்கையை நடத்தினர் அதுவும் தமிழ்நாட்டிலேயே இவர்கள் வாழ்க்கையை தொடங்கினர்.

 மனைவி வீட்டார்  வழியே நடத்தினார் அதில் ஒரு முறையோ அல்லது இருமுறையோ கணவன் ஊருக்கு செல்வார்கள் அவருக்கு அங்கே இரண்டு தம்பிகள் உள்ளனர் அவர்களும் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதனால் இவரை அனுமதிக்க மறுக்கிறார்கள் ஏனென்றால் இவர் மனம் முடித்த பெண்ணின் குடும்பம் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பம் அதனால் கணவனின் குடும்பம் அனைவரும் விலகிச் சென்றனர்.

இப்போது மனைவியின் வீட்டை நம்பியே கணவன் வாழ வேண்டிய சூழ்நிலை ஆயிற்று இதனால் அப்பாவின் சொந்தத்தை இழந்த குழந்தைகள் அம்மாவின் சொந்தத்தை நம்பியே வாழ வேண்டிய சூழ்நிலை இவர்கள் சிறுவயதில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை குழந்தைகளுக்கு நன்றாக அனைத்து சந்தோஷத்துடனும் வாழ்ந்தனர் ஒரு கட்டத்திற்கு மேல் அக்குழந்தைகளுக்கு வயது ஆயிற்று அப்போது தன் குழந்தைகளுக்கு அதுவும் பெண் குழந்தைகளுக்கு நிறைய விசேஷங்கள் நடக்கும் அது அனைத்தும் அம்மாவின் கலாச்சாரப்படியே நடந்தது எல்லாமே தமிழ்நாட்டில் நடந்தது எப்படி அம்மாவின் கலாச்சாரத்தின் வளர்ந்த குழந்தைகள் ஒரு கட்டத்திற்கு மேல் கல்யாணம் என்ற சூழ்நிலை வர அப்போது கல்யாணம் கட்டிக் கொடுக்க அம்மாவின் கலாச்சாரப்படி அம்மாவின் சொந்தங்களான தாழ்த்தப்பட்டவர்கள் அவர்களின் வகையில் கொடுக்க மனம் வரவில்லை அதனால் அப்பாவின் சொந்தங்களிடம் போய் பேசி பார்க்கலாம் என்று போய் பேசினார்கள் அப்போது அவர்கள் தம்பிகளான இருவரும் ஒழுங்காக பேசவில்லை கடைசியாக எதற்காக இங்கு வந்தீர்கள் என்று கேட்டதற்கு நாங்கள் எங்கள் பெண்களுக்கு கல்யாணம் கட்டி வைக்க முடிவு எடுத்திருக்கிறோம் 

அதற்கு கேரளாவில் மணமகன் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று அதனால் உங்களை  தேடி வந்திருக்கிறோம் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என்று சொல்லிட்டு அங்கிருந்து வந்து விட்டார் பின்னர் ஒரு வாரம் கழித்து ஒரு பதில் வந்தது தம்பிகளிடமிருந்து இங்கே உங்கள் பெண்களுக்கு மணமகன் இருக்கிறார்கள் நாங்கள் வருகிறோம் பெண்களை பார்க்க அப்படி என்று சொல்லவும் இவர்களுக்கு ஒரே ஆனந்தம் ஒரு வகையாக முதல் பெண்ணுக்கு கல்யாணம் ஆயிற்று கேரளாவில். நம் குடும்பம் தாழ்த்தப்பட்டதில் இருந்து இன்று பெண்ணுக்கு கேரளாவில் கல்யாணம் செய்து விட்டதால் நம் குடும்பம் கொஞ்சம் உயர்ந்தது என்று நம்பிக்கை வந்தது அதற்கு அப்புறம் ஒரு வருடத்தில் இன்னொரு பொண்ணுக்கும்  கல்யாணம் ஆயிற்று அதுவும் கேரளாவில் தான் இன்னும் இரண்டு வருடத்தில் இன்னொரு பெண்ணுக்கும் கல்யாணம் ஆயிற்று இப்படி எளிதாக கல்யாணம் ஆகிவிட்டது.

வாழ நினைத்து வாழ்க்கை இழந்த கதையில் உணர்த்தும் வரி

பெண்களுக்கு அழகும் நல்ல குணமும் இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணாக இருந்தாலும் கல்யாணம் கண்டிப்பாக நடக்கும்...

அடுத்ததாக  வீட்டில் இரண்டு ஆண் மகன்கள் இருக்கின்றன அவர்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று முடிவு செய்கின்றனர் அப்பொழுது அம்மா அப்பா மகனுக்கும் கேரளாவிலேயே பார்க்கலாம் என்று முடிவு செய்கின்றனர் அவர்களுக்கு பெண் தேடச் சொல்லி  மூன்று பெண்களிடம் சொல்கின்றன அவர்களும் பார்க்கின்றனர் ஆனால் ஒரு பெண்ணும் கிடைக்கவில்லை அனைத்து பெண்களும் படித்திருக்கிறார்கள் இன்னொன்று அம்மா தாழ்த்தப்பட்ட ஜாதி என்று சொல்லவும் யாரும் பெண் கொடுக்க மாட்டேங்கிறாங்க  என்று சொல்கிறார்கள் அம்மாவிடம் இதை மூன்று பெண்களும் சொன்னனர்.அதனால் நம்ம கல்யாணம் தள்ளி தள்ளிப் போகிறது ஒரு கட்டத்திற்கு மேல் அண்ணனுக்கு 35 வயது ஆகிறது தம்பிக்கு 31 அம்மா அப்பா இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்றேன் என்று அண்ணனுக்கு 42 வயது ஆயிற்று இன்னும் கல்யாணம் கட்டி வைக்கவில்லை ஏனென்றால் இவர்களின் கவுரவம் அதனால் அண்ணனின் வாழ்க்கையை தொலைத்தனர் தம்பிக்கும் அதே நிலைமை வந்துவிடும் என்று பயத்தில் அம்மாவின் சொந்தத்தில் ஏதோ ஒரு பெண்ணை காதலித்த மனம் முடித்தார் இப்போது அண்ணனின் வாழ்க்கை நல்லா இருக்க வேண்டும் என்று முடிவெடுத்த காரியம் வாழ்க்கையை இழக்க நேரிட்டது....

 இக்கதையில் பழமொழி

உலகத்தை பார்த்து வாழத் தெரிந்தவனுக்கு அனைத்தும் நரகமே.. தன்னை பார்த்து வாழ தெரிந்தவனுக்கு கிடைத்தது சொர்க்கமே.

இக்கதை அனைத்து குடும்பங்களுக்கும் சமர்ப்பணம் 

நன்றி



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات