ஒற்றுமையின் நலன் கதையின் சுருக்கம்
ஒரு நாடு நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தால் என்னென்ன நலன்களையும் மகிழ்ச்சியயும் அடையும் என்பதே இக்கதை.
ஒற்றுமையின் நலன் கதையின் விளக்கம்...
எல்லோருடைய வாழ்க்கையில் பள்ளி பருவம் மிகவும் அழகான நாட்கள். அதில் உண்ண உணவு,உடலை மறைக்க உடை,பாதுகாப்புக்கு ஒரு உறைவிடம். குழந்தைகளின் மனதில் எந்த ஒரு ஏற்றத்தாழ்வு நீ வசதி நான் வசதி என்ற எண்ணம் இருந்ததே இல்லை. அது போல பள்ளி மாணவர் மாணவிகள் அனைவருக்குமே ஒரே வர்ண சீருடை. திறமையின் அடிப்படையில் பாராட்டுக்கள்.
இதுபோலவே நாட்டு மக்களும் அன்பினாலும் பண்பினாலும் ஒழுக்கமாக ஒற்றுமையுடன் இருந்தால் நாடே சொர்க்க பூமியாக மாறிவிடும்.
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அவரவர் தேவையை நோக்கி தான் வாழ்க்கையில் ஓடுகிறார்கள் தவிர யார் மனதிலும் ஒற்றுமை இல்லை அதற்கு காரணம் நாம் அனைவரும் ஜாதி மதம் என்ற பாகுபாட்டினாள் பிரிந்து இருக்கிறோம். ஒற்றுமையாக இருந்தால் ஒருவர் வீட்டில் பிரச்சனை இருந்தால் கூட நம்முடைய பிரச்சனைகளை வெளிப்படுத்தலாம் அதன் மூலம் நான்கு பேர் விசாரித்து அவர்கள் பிரச்சனையை சரி செய்ய முடியும்.அதுபோல நாட்டிலும் அதிகமான பிரச்சனைகள் உண்டு அதற்கெல்லாம் ஒரே தீர்வு நம்ம ஒற்றுமையை.ஒற்றுமையாக இருந்தால் கேள்வி கேட்கலாம் கேள்வி கேட்டால் நல்ல ஆட்சி உண்டாகும் அதுபோல அனைவரும் ஒன்று சேர்ந்து நின்று கேள்வி கேட்டாலே இந்த நாட்டின் தலையெழுத்தை மாற்ற முடியும் நினைத்துப் பாருங்கள் ஒற்றுமையுடன் இருப்பது எவ்வளவு நன்மை என்று.
ஒரு கம்பெனியில் 300 நபர்கள் வேலை செய்கிறார்கள் ஆனால் அவர்கள் மனதில் எல்லோரும் மனிதர்கள் என்ற எண்ணம் கிடையாது அவர்கள் அவரவர் ஜாதியை வைத்து தான் அவர்களை தீர்மானிக்கின்றன இதில் எப்படி ஒற்றுமை வரும் நம்ம வாழ்ந்தால் போதும் என்று எண்ணம் மட்டுமே இருக்கும்.
ஒற்றுமையுடன் இருந்தால் அந்த இடத்தில் இருக்கும் அனைவருமே அண்ணன் தம்பி போல பழகுவார்கள் ஏற்றத்தாழ்வு இருக்காது நமக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அனைவரும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை ஏற்படும். இது போல நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் எதிரி நாடு கூட நம்மை தலை வணங்கும் நம் ஒற்றுமையை பார்த்து அனைவரும் பெருமைப்பட வேண்டும். நல்ல கொள்கைகளை மனிதர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் இதை செய்தால் மனிதனும் வளம் பெறுவான் நாடும் வளம் பெறும். இன்றைய நல்ல வாழ்க்கை அடுத்த தலைமுறையை வாழ வைக்க முடியும். இன்றைக்கு ஒற்றுமை இல்லாத வாழ்க்கையால் அவரவர் சுயநலத்துக்காக வாழ்ந்தால். நாளைய தலைமுறை கண்டிப்பாக நல்ல வாழ்க்கையை அனுபவிக்க முடியாது வாழ்க்கைக்காக போராடிய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
நேற்றைய போராட்டம் இன்றைய சந்தோசம் இன்றைய போராட்டம் நாளைய வாழ்க்கை.
ஒற்றுமை நமக்கு நாமே சேர்த்துக் கொள்ளும் மன தைரியம் ஒற்றுமையுடன் கேள்வி கேட்டால் எதிரில் இருப்பவனும் அவனுடைய வேலையை சரியாக செய்வான் அதே மாதிரி நமது கிராமத்தில் எந்த ஒரு பிரச்சனை ஏற்பட்டாலும் ஒரு 50 பேர் சேர்ந்து நின்று போரடினலே பிரச்சனை நீங்கும் அதுபோல அந்த கிராமத்தில் புதுப்புது நிகழ்வுகளை நிகழ்த்தலாம் அந்த கிராமமே அழகான அமைதியான சூழ்நிலை நிலவும். இன்றைய சூழ்நிலையில் ஒற்றுமை என்பது அறவே கிடையாது ஒற்றுமையுடன் வாழ்ந்தால் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் ஒற்றுமை இல்லாததால் வசதியானவர்களுக்கு மட்டுமே அனைத்தும் கிடைக்கும். ஏழைகளுக்கு பஞ்சத்தில் அடிபட்டு வாழ்க்கையே இழக்க நேரிடும்.
ஒரு பறவை தனியாக இருப்பதை விட கூட்டமாக சுற்றுவதை பார்க்கும் போது நமக்கு அழகாக தெரிகிறது.
தனித்தனியாக வாழ்ந்து வாழ்க்கை நடத்துவதை விட அனைவரும் இணைந்து இயற்கையையும் பண்பாட்டையும் நல்ல கொள்கையும் கடைபிடிப்பது மனிதனுக்கு நலம்.
முதலில் கடவுள் ஒருவனாகவும் மக்கள் அனைவரும் அவர் ஒருவனே கடவுளாகவும் வணங்குவது ஒற்றுமைக்கு வழி பல கடவுள்களையும் பல முறைகளையும் கடைபிடிப்பது நம் ஒற்றுமைக்கு பிரிவு ஏற்படும் முதல் படி.
நாட்டிற்கு நல்லது செய்வோம் நமது வீட்டிற்கு தானாக நல்லது நடக்கும்.
ஒரு ஆட்டு மந்தையின் கூட்டத்தை பார்த்து சிங்கம் கூட பயந்து ஓடும்
மக்களின் கூட்டத்தை பார்த்து அரசியல்வாதிகளும் தவறான சட்டங்களை முடிவு எடுக்க ஒரு அடி பின்வாங்குவார்கள்.
ஒரு நாட்டின் சீர்குலைவிற்கு முழுக்க முழுக்க மக்களே காரணம் எப்பொழுது தெளிவாக யோசித்து வாழ்க்கையை இணைந்து நடத்துகிறார்களோ அப்பொழுதுதான் நம் நாடு வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் ஆயிரம் அரசியல்வாதிகள் வந்தாலும் இந்த நாட்டை காப்பாற்றுவது மக்கள் கையில் தான்.
வால் நீளமாக இருந்தாலும் வால் வீசபவரின் திறமை சரியாக இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்
அதுபோல அரசியல்வாதிகளின் சக்தி பெரியதாக இருந்தாலும் மக்களின் ஒற்றுமை சரியாக இருந்தால் வெற்றி மக்களுக்கே...
நாம் இயற்கையை மறந்தாலும் இயற்கை நமக்கு கொடுப்பதை மறப்பதில்லை.
அப்படிப்பட்ட இயற்கையை நாம் இணைந்து பாதுகாத்து வருவது அடுத்த தலைமுறைக்கும் நம் நாட்டில் உயிராக பிறந்திருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் செய்யும் முதல் கடவுள் வாழ்த்து.
ஒரு நல்ல நாட்டிற்கு அடையாளம் ஒற்றுமையும்
நல்ல கொள்கையும் எங்கே வெளிப்படுகிறதோ
அதுவே நல்ல நாடு...
ஒன்று கூடி வாழ்வோம் அனைத்து இயற்கையையும் பண்பாட்டையும் காப்போம் நம் நாட்டின் தவறான செயல்களில் ஈடுபடுவோரை கேள்வி கேட்டு நல்வழியில் நடத்துவோம்
ஒற்றுமையை பலம்
ஒற்றுமையே துணை
ஒற்றுமையை நல்வழி....
நன்றி





0 تعليقات