கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை தாய்மை
சீதனக்கொடுமையினால் தாய்மையெனும்
பெண்ணின் சிறப்பதனை இழந்துநின்றேன்
முதிர்கன்னியெனும் பெயருடனே
அகத்தில்சலிப்புடனும்
முகத்தில் சிரிப்புடனும்
வலிகள் நிறைந்ததுதான்
வாழ்க்கைஎன்றால்
வாழ்ந்துதான் ஆகவேண்டும் என
ஏங்கித்தவித்திருந்த வேளையிலே
எங்கிருந்தோ ஒரு கருணைமிகு கண்ணாளன்
கட்டிளம் காளளையவன்
சிறறைப்பிடித்தான் என் மனதை
அன்பிற்கிலக்கணமாய் எனை அரவணைக்க
கருவுற்றான் ஒரு தவப்புதல்வன்
பத்து மாதங்கள் பத்திரமாய்
பகலிரவாய் காத்துவர
வந்துதித்தான் தவப்புதல்வன்
மனம் மகிழபெற்றுவிட்டேன்
பெண்ணின் சிறப்பதாாம் தாய்மை.
நன்றி - Nageswary
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்.
0 Comments