தமிழ் கவிதை நினைவில் நின்றவை (Tamil Kavithai Memorable)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை நினைவில் நின்றவை

தமிழ் கவிதை நினைவில் நின்றவை

கொட்டிய துளிகள்

கோடிகள்தான்

முத்தானதென்னவோ

ஒரு துளிதான்

நினைவுகள் என்னவோ

நிறையத்தான்

நின்றதென்னவோ 

நிஜங்கள்தான்


வாங்கிய அனுபவ அடிகள் ஆயிரம்

கற்றதென்னவோ வாழ்க்கைப் பாடம்

நினைவில் நின்றவை வலிகள் அல்ல

பாடம் மட்டுமே...

பகையானவரின் பாதகத்திலும்

நினைவில் நின்றது உதவி மட்டுமே


கண்ணில் பெருகிய 

கங்கையின் இடையிலும்

நினைவில் நின்றது

கவலை மட்டுமே

கடக்கும் முள் பாதையின் வலியிலும்

நினைவில் நின்றது

இலட்சிய மலர்ப்பாதை மட்டுமே.....

நன்றி - K.நிலா

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்.. 



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments