தமிழ் கவிதை நீ இல்லா வாழ்வு அது, நீலம் இல்லா கடல் போல. (Tamil Kavithai Friendship)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை நீ இல்லா வாழ்வு அது, நீலம் இல்லா கடல் போல.

தமிழ் கவிதை நட்பு

நீ இல்லாமல் நான் வாழ்ந்திடுவேனா!

உன்னால்  நான் கொண்ட அவதி


மீண்டும் வேண்டி மறு நாள் கேட்கும்,

நீ இல்லா நொடியோ வேம்பென கசக்கும்,

என் துன்பத்தில் உன் கண் பனியென கரையும்,

என் சிரிப்பில் உன் மகிழ்ச்சியை காண்பாய்,


என் காதலுக்கு நீ காவல்,

என் முன்னேற்றத்தை உனது உழைபால் ஊன்றி தள்ளுவாய்,

எனது நம்பிக்கை இல்லா நேரத்தில்,

காண முடியாத இறையின், காண முடிகிற நிழல் நீ,


நீ மனிதனோ, மிருகமோ, மரமோ, மௌனமோ, 

நான் உன் மேல் கொண்ட உணர்வு அது எதிர்பார்பற்றது,

ஆனால் இந்த உலகம் உன்னை 

மூன்று எழுத்து பெயர் வைத்து சுருக்கி விட்டது.

நன்றி - ப.செல்வகுமார்

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments