கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை முதல் காதல்
இரண்டொரு வருடமாய்
இப்படி துடித்ததில்லை இருதயம்....
முதல் காதலை முழுதாய்
மறந்ததில்லை...
மறந்திருந்தால் நான்
மனிதனே இல்லை .......
மனதோடு மழைக்காலம்
அவ்வப்போது வரும்
அவளின் நினைவுகள்...
இப்படி என் வாழ்க்கை...
அப்படி ஒரு நாள்
தொலைபேசி அதிர
அழைப்பை ஏற்றேன்....
ஹலோ சொல்லி
ஆரம்பிக்க!!!
ஆயிரம் பட்டாம்பூச்சி
எனக்குள்ளே....
ஆம் அவளே தான் ......
திருமணத்திற்கு
அழைக்க மறந்தவள்
வளைகாப்புக்கு
அழைப்பு விடுத்தாள்...
அவள் கஷ்டங்களை
சொல்லி அழ ஆள்
இல்லையாம்....
அழுதாள்....
கலங்கி தான் போனேன்
கஷ்டங்களை கண்டு அல்ல..
என்னவள் கண்ணீரை கண்டு..
அரை மணி பேசி விட்டு
அரை மனதாய் அழைப்பை துண்டித்தாள்...
எதிர் பார்த்ததில்லை
என்னவளை...
இப்படி ஒரு சூழலில்
கஷ்டங்களை கொடுத்த
கடவுளுக்கு நன்றி !!
என்னவளுக்கு
ஆறுதலாய் நானிருக்க
கஷ்டங்களை கொடுத்த
கடவுளுக்கு நன்றி!!!!...
நன்றி -சிவம்
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
.jpg)




0 Comments