கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
அனைத்தையும் கற்றறிந்து
அகிலமதை ஆள வேண்டும்
தடைகள் பல தாண்டியே
சாதனைகள் புரிய வேண்டும்
வற்றாத நதிபோல் உம்சேவை
நிற்காமல் ஓட வேண்டும்
வாழ்க்கையில் வசந்தங்கள்
வரையறையின்றி கிடைக்க வேண்டும்
தங்களது வம்சமது தலைமுறையாய்
வாழ வேண்டும்
இம்மையிலும் மறுமையிலும்
இன்பம் கிடைக்க வேண்டும்
இகமதில் சான்றோரின்
இதயத்தில் அமர வேண்டும்
அளவற்ற அன்பினை அனைவரும் தர வேண்டும்
உயர்வோ தாழ்வோ
உள்ளத்தால் ஏற்க வேண்டும்
நீங்காத துயரங்கள் நில்லாது
போக வேண்டும்
மின்னும் தாரகை போல்
மண்ணில் ஜொலிக்க வேண்டும்
பதினாறும் நீர் பெற்று
பல்லாண்டு வாழ வேண்டும்
அளவில்லா பொறுமையே
தங்களின் பெருமை
உங்களின் சேவைகள்
எப்போதும் அருமை
பூவுலகக் கண்ணணே -தொடர்ந்தும்
புன்னகைத்தால் நல்லதே
பூக்களும் அணிவகுக்கும்
வாழ்த்துக்கள் சொல்லவே
காலங்கள் மாறினாலும்
கோலங்கள் எழில் பெறவே
நல்லவைகள் பல செய்து
ஞாலத்தில் நலம் பெறவே
நற்பண்பு தனில் மிளிர்ந்து நம்பிக்கை
வலுப்பெறவே வாழ்த்துறோம்
வாழ்த்துறோம் வாழ்த்துறோமே
நன்றி - Surekanth Mary Prinsiya
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்.
0 Comments