கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை இயற்கை ஒரு மதுரசம்!
இளங்காலைப் பொழுது இலைகளின் மேல் வியர்வைத்துளிகள்
முல்லைப் பூக்கொந்து நறுமணமாய்
முகத்தோடு உரசிச்செல்ல
இல்லையென்று சொல்லாத இளந்தென்றல் இதழ்வருடி
எங்கோ, அழைத்துச் செல்லும்;
சிட்டுக் குருவிகளின்
சீழ்க்கை ஒலியின் இனிமையும்,
ஆக்ரோஷமாய் வந்து விழும்,
அருவியின் ஆரவாரச் சத்தமும்,
மரக்கிளைகள் ஒன்றோடொன்று,
உரசிக்கொள்ளும் ஒலிகளும்,
இலைகளைத் தாலாட்டிச் செல்லும்,
இளந்தென்றளின் ஓசையும்,
குக்கூவெனக் கூவித்திரியும்,
குயில்களின் கானமும்,
மூங்கிலின் முதுகினிலே,
காற்று வந்து மோதுவதால்
பிறந்து வரும் கீதமும்
பாரிஜாத மலர்களின்
பாகுபாடற்ற நறுமணமும்,
மந்திகளும் கவிகளும் மகிழ்வாய்
பேசிக்கொள்ளும் குரலோசையும்,
ஆயிரம் வாத்தியங்கள் இசைத்து
ஆரவாரமான ஒரு கச்சேரியை
செவிமடுத்த, இன்பம் அல்லவா.?
குழவியாய் துள்ளிச் செல்லும் குரங்குகளின் கூட்டமும்.
மருண்டு நோக்கும், மான்களின் பார்வையும்,
என்னை மலைக்கச் செய்கின்றனவே..!
என்னையே மாந்தேன். இயற்கையின் அழகுக்கு
இதயத்தைப் பரிகொடுத்து...
நன்றி - ரா.தீபிகா
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 Comments