தமிழ் கவிதை காதல் (Tamil Kavithai - Love)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை காதல்


தமிழ் கவிதை காதல்

பள்ளி பருவத்தில்  அறும்புமீசை  படர்கையில் 
குறும்பு காதல் ஒன்று விதைத்தேனடி, 
குறும்பு காதல் என்பதால் 
பள்ளியில் படிக்கச் சேன்றதையே மறந்தேனடி, 

கல்வி பாடங்கள் கற்க வந்த நான் 
உன் விழிகளில் காதல் பாடங்களை கற்றேனடி, 
எனது எழுதுக் கோலின் மைத்துளிகளில் இருந்து 
புத்தகத்தின் கடைசி பக்கம் வரை 
உனது பெயரை உச்சரிக்குமடி, 

கரும்பலகையை பார்க்க வேண்டிய என் விழிகள் 
கருங்கூந்தலை பார்த்துக் கொண்டிருந்ததடி, 
நீ வந்து பேசும் நேரம் 
என் விழிகள் உன்னை பார்க்க முடியாமல் 
முகவரி இல்லாததுப் போல் 
அங்கும் இங்கும் சுத்தி சுத்தி அலைந்ததடி, 

தோளோடு தோல் உரசி 
சுண்டுவிரல் கரம் பிடித்த அந்த தருணம் 
மரணம் வரையிலும் மறக்காதடி என் காதலியே!

நன்றி - S. மதன்குமார்

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்.. 



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments