கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை முடிவுப் பக்க முன்னுரை
பின்னிரவு நாகம் பின்னிப் பிணைத்தது
முழுமதியும் முறைத்து பார்த்தது
ஆந்தை சீறலும் மழைத் தூறலும்
என்னை திட்டுவதாகவே இருந்தது
அமர்ந்த இடம்கூட எழுந்து செல் என்றது ..
கிரகணங்கள் எல்லாம்
என்னை சுற்றிவந்து எக்களித்தது
பிரபஞ்சமே எனக்கெதிராய்
என்றும் சமநிலையில் இருக்கின்ற
நானோ இன்று அவனில் நிலையானேன்
அதனாலே இந்த நிலையானேன் ...
முதிந்த முயலையும் அழகிழந்த மயிலையும் ..
அதிவேக ஆமையையும்
அகலாத முகிலையையும் ..
அழாத மழலையையும் கண்டதுண்டா ..
அதுபோலே என் காதல் ..
அதுபோல் எந்தன் வலி ..
அதுபோலே எந்தன் கண்ணீர்
அதுபோலே எந்தன் ஏக்கம்
கலியுகம் நிகழ்த்துகின்ற
பேரதிசியங்களில் காதலும் ஒன்றுதான் .. !!
நன்றி - கவிதைச் சிறுவன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 Comments