கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil )
தமிழ் கவிதைகள் - எந்தன் மகளே!
எந்தன் மகளே ....!
கட்டில் மீது கண்ணுறங்கும்
என் சுட்டிக் குழந்தை நீயடி...
வண்மை தளர்த்தேன் கைகளில்;
மெல்லப் பூவென அள்ளிடவுன்னை!
எந்தன் கையில் நீயும் வந்தால்;
உந்தன் சிந்தை நான் வளர்ப்பேன்.
உன்னை நினைத்தே - நானும்
உள்ளம் மகிழ்வேன் நாளும்.
உந்தன் சிரிப்பில் தானே
எந்தன் உறவும் நீளும்....!
கண்ணீர்த்துளி நீ - சிந்தினால்
கண்ணே தவறுகள் இல்லையடி !
எதிர்காலம் தன்னில் தவறுகள்
உனைத் தீண்டாவண்ணம்
இது காக்குமடி....;
பெண்னே நீயும் புவிதனில் மலர்வாய்
நாளை போராட்டம் கோடி கண்டு
பாராட்டுத்தான் பெறுவாய்.
வல்லமை தன்னை வாகையென
வையத்தில் நீ சூடடி;
வந்தவர் யாவருமிங்கு -" தந்தை
தமையன் போல் மாறிடார் "
நீயும் நம்படி.
நன்றி - அ. பிரதாயினி.
அப்பா பிரிவு கவிதைகள்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
.jpg)




0 Comments