கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil )
காதல் கவிதை - Kadhal kavithai
கோபுர நிழலிலே கோவில் வாசலிலே
உன்தன் காலடி அச்சை நான் கண்டேன்
தடம் பதித்த உன் நடை அழகை நான் நினைக்க
உன் சலங்கை சத்தம்
ஏனோ என் மனதில் சலனத்தைத் தூண்டியது
வளையல் ஓசை அவள் வயதை காட்டவோ
அவளது மேனி மனம் வீச
காற்றின் அழகை அவள் கூந்தல்
பறந்து அசையும் அதிசயம் கண்டேன்
என் மனம் நிறைந்த நறுமணம் நுகர நான் மகிழ்ந்தேன்
அவள் மண் மனம் மாறா பெண் குணம் கண்டு நான் வியந்தேன்
அவளை நான் நேரில் காண
கடவுள் வடித்த பெண் சிலை என்பேன்
மலர்ந்த மலர் போன்ற அவள் முகம்
ரசிக்க வைத்த அவள் சிரிப்பு என்பேன்
பஞ்சு போல கன்னம் என் நெஞ்சை
கவரும் வண்ணம்
நற்சொல் உரைக்கும் அவள் உதடு
கோவப்பழம் நிற அழகு
நெற்றி நடுவே பொட்டு அது நெஞ்சைத் திருடும் சற்று
மாலைப் பொழுதும் மஞ்சள் மேனி நிறமும் நீங்காத நினைவாய்
என் நெஞ்சில் நிறைய கண்டேன்
கனவில் என் இரவில் நெஞ்சில் கலந்த நினைவாக நள்ளிரவில் தீண்டல் கண்டேன்.
என் மனதில் காதல் மலர கண்டேன்.
0 Comments