தமிழ் கவிதைகள் - இயற்கையே கடவுள் (Tamil Poems - God by nature)

கவிதை போட்டி (Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதைகள் - இயற்கையே கடவுள்

இயற்கையே கடவுள் - God by nature

யார் சொன்னது கடவுள் இல்லையென்று? 
கடவுள் இருக்கிறார். 
பகலில் ஒளி-வெளிச்சம் தரும் சூரியன் ஒரு கடவுள் 
இரவில் ஒளி-வெளிச்சம் தரும் சந்திரன் ஒரு கடவுள் 
சூரிய மண்டலத்தில் உள்ள ஒன்பது கோள்களும் கடவுள் 
அதில் ராகுவும் கேதுவும் கூட ஒரு கடவுள் 
கோவிலில் உள்ள மரத்தை சுற்றி வளம் வருகிறோமே அது ஒரு கடவுள் 
வேப்பமரம், ஆலமரம் மட்டும் அல்ல, உலகத்தில் உள்ள எல்லாம் மரங்களும் கடவுள் 
நீர், நெருப்பு, ஆகாயம், மண், காற்று ஆகிய பஞ்ச பூதங்களும் கடவுள்; பறவைகளில் நாம் காண்கிறோம் கடவுள் 
மிருகங்களில் நாம் காண்கிறோம் கடவுள் 
அன்பில், பாசத்தில், கருணையில் நாம் காண்கிறோம் கடவுள் 
ரத்த பந்தத்தில் நாம் காண்கிறோம் கடவுள் 
நம்மை பெற்ற அம்மா-அப்பா ஒரு கடவுள் 
நமக்கு பள்ளி,கல்லூரிகளில் பாடம் கற்றுத்தரும் ஆசிரியர் ஒரு கடவுள் 
நல்ல நண்பன் ஒரு கடவுள்; அண்ணன் மற்றும் அண்ணி ஒரு கடவுள் 
வயதில் முதியவர்கள், மூத்தவர்கள் ஒரு கடவுள் 
நதிகள் எல்லாம் கடவுள் 
மலைகள் எல்லாம் கடவுள் 
நமக்கு உணவு போடும் விவசாயி ஒரு கடவுள் 
நமக்கு உணவளிக்கும், மருந்தளிக்கும் செடிகள் எல்லாம் கடவுள் 
நதிகள் எல்லாம் கடலில் பொய் சங்கமிக்கும்
அந்த கடலே ஒரு கடவுள் 
ஆக மொத்தம் உலகத்தில் நாம் உணரும் அனைத்துமே கடவுள் 
ஆகையால் இயற்கையே கடவுள்

 நன்றி - M.மனோஜ் குமார்

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்



இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments