கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil )
கற்க கசடற - Karka Kasadara
மணலை தோண்ட தோண்ட தண்ணீர வரும்
புத்தகங்களை படிக்க படிக்க கல்வியறிவு வளரும்,
அந்த கல்வியறிவால் புகழும் பெருமையும் தேடி வரும்,
இப்பிறவி மட்டும் அல்ல ஏழேழு பிறவிக்கும் பாராட்டு தேடி வரும்
கணக்கும் இலக்கியமும் இரண்டு கண்கள் என்று சொன்னார் வள்ளுவர்.
இவை இரண்டுமே எண் மற்றும் எழுத்து என்று விளக்கமாக சொன்னார் அவர்;
இவ்விரண்டும் இல்லையெனில் சிறுவர்களும் ஏமாற்றுவர்.
படிக்காதவரும் நம்மை விழுங்கி விடுவர்
திறமைசாலிகளை உலகம் விரும்பும்
அவர்களை பிரிந்தால் துன்பத்தில் தேம்பும்
பேச்சு இனிக்க இனிக்க பேசினால் மயங்கும்;
இதுவே புலவர்களின் சிறப்பு குணமாகும்
கல்வி கற்றல் பெரிதல்ல; கற்ற கல்வியை பயன்படுத்த வேண்டும்.
இல்லையென்றால் அவமானத்தை சந்திக்க வேண்டும்;
கற்ற கல்வி அனைவருக்கும் பயன்தர வேண்டும்.
இல்லையென்றால் மிருகத்தை போல் சுற்றி திரிய வேண்டும்
உதவியின்றி தவிப்பவர்க்கு உதவி செய்ய படி
உணவு இன்றி தவிப்பவர்க்கு உணவு போட படி
அழுபவனின் கண்ணீரை துடைக்க படி
ஊர் பிரச்சனைகளை தீர்த்துவைக்க படி!
படித்தவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
படிப்பறிவு இல்லாதவரை பார்த்தால் எல்லோருக்கும் வரும் வெறுப்பு;
உலகத்தில் கல்வி தான் அழிக்கமுடியாத, நிலையான சொத்து;
மற்றவையெல்லாம் நிலையில்லாத, எளிதாக அழியக்கூடிய சொத்து
நன்றி - M.மனோஜ் குமார்
0 Comments