பிரித்தானியர் ஆட்சி காரணமாக ஏற்பட்ட விளைவுகள் (Consequences due to British rule)

பிரித்தானியர் ஆட்சி காரணமாக ஏற்பட்ட அனுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்கள்

பிரித்தானியர் ஆட்சி காரணமாக ஏற்பட்ட விளைவுகள்

அனுகூலங்கள்

இலங்கை பிரித்தானியாவின் குடியேற்ற நாடாகத் திகழ்ந்தபோது இந்நாட்டின் அரசியல், பொருளாதார முறைமைகள் முழுமையாக ஏகாதிபத்தியவாதிகளின் நலன் கருதியே நடைமுறைப்படுத்தப்பட்டன. எனவே சுமார் 133 ஆண்டுகளாக இலங்கை பிரித்தானியரின் சுரண்டலுக்கு உட்பட்டது. அக்காலப் பகுதியில் பிரித்தானியர் உழைத்த பணம் முழுவதும் அவர்களின் தாய் நாட்டைச் சென்றடைந்தது. அத்துடன் இலங்கையின் வளங்கள் பிரித்தானியரின் தேவைகளுக்கே பயன்படுத்தப்பட்டன. அவ்வாறனதொரு பின்னணியிலும் இலங்கைக்கான சில நன்மைகளும் பிரித்தானியர் ஆட்சியின் விளைவாக ஏற்பட்டதை மறுக்க முடியாது. அதற்கான உதாரணங்கள் சில பின்வருமாறு.

  • சர்வதேச மொழியான ஆங்கில மொழியறிவு நாட்டினுள் பரவியமை.
  •  போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் துறை வளர்ச்சியடைந்தமை.
  •  ஏற்றுமதிக்கான பெருந்தோட்டப் பயிர்களை அறிமுகம் செய்தமை.
  •  கைத்தொழில் புரட்சியின் நன்மைகளை இலங்கையும் பெற்றமை.
  •  பாராளுமன்ற ஆட்சி முறை.


பிரதிகூலங்கள்

பிரித்தானியர் ஆட்சியில் இவ்வாறான பல்வேறு நன்மைகள் எமக்குக் கிடைத்த போதிலும் தொடர்ந்து 133 ஆண்டுகளாக இலங்கை ஏகாதிபத்திய சுரண்டலுக்குட்பட்ட ஒரு நாடாக இருந்தது. சுதந்திரமடையும்போது நாட்டில் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்பட்டிருந்தன. அக்காலப் பகுதியில் இலங்கையில் உள்நாட்டுப் பணக்காரர்கள் தோன்றியிருந்த போதிலும் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஏழைகளாக காணப் பட்டனர். நாட்டின் வருமானப் பகிர்வில் ஏற்றத் தாழ்வு அதிகரித்த நிலையில் பொது மக்களுக்கான பொதுச் சேவைகள் மற்றும் நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்தப்பட்டன.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments