தெங்குப் பயிர்ச்செய்கை (Coconut cultivation)

தென்னை பயிர்ச்செய்கை

தெங்குப் பயிர்ச்செய்கை


தென்னை பண்டைக் காலம் முதல் இலங்கையில் பயிரிடப்பட்டு வந்த வீட்டுத் தோட்டப் பயிராகும். 1850களில் கோப்பியின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து தென்னையின் மீது கவனம் செலுத்தப்பட்டது. ஐரோப்பியரை விட இலங்கையர் தென்னை பயிரிடுவதில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். 1880 ஆம் ஆண்டளவில் தென்னந்தோட்ட உரிமையாளர்கள் 65 வீதமானோர் இலங்கையராக இருந்தனர்.

மலைநாட்டுப் பிரதேசங்களை விடப் பரந்த சமவெளிப் பிரதேசங்களிலே தென்னை பயிரிடப்பட்டது. குருணாகல், சிலாபம், கம்பஹா முதலிய பிரதேசங்கள் தெங்குப் பயிர்ச் செய்கையில் முக்கிய இடம்பெற்றன. 1920களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தின் 275 தென்னை மூலம் கிடைக்கப்பெற்றது. தெங்குப் பயிர் பரவலடைந்தபோது லுணுவில என்னும் இடத்தில் தென்னை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டதுடன் அப்பயிர்ச்செய்கை அபிவிருத்தி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இலங்கையின் தெங்கு உற்பத்தியில் அரைவாசிக்கு மேல் உள்நாட்டில் நுகரப்படுவதால் அது ஏனைய பெருந்தோட்டப் பயிர்களைப் போல் முற்றுமுழுதாக ஏற்றுமதியை நோக்காகக் கொண்டு பயிர் செய்யப்படவில்லை என்பது தெளிவாகின்றது. கோப்பி, தேயிலைப் பயிர்ச் செய்கை காரணமாக மலைநாட்டுப் பிரதேசந்தில் பெருந்தெருக்களும் புகையிரத வீதிகளும் அபிவிருத்தியடைந்ததைப் போலவே தெங்குப் பயிர்ச் செய்கை காரணமாக அது பயிரிடப்பட்ட பிரதேசங்களிலும் வீதி அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டதை அவதானிக்க முடிகின்றது.


துாய்மையான தேங்காயின் முக்கியத்துவம்

தற்போதைய தேங்காய் உற்பத்தியில் அதிக கேள்விக்கான தேங்காய் தட்டுப்பாட்டை செயற்பாட்டாளர்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கின்றது. எனவே செயற்பாட்டாளர்களின் நன்மையை கருத்திற்கொண்டு தூய வரட்சியான காலங்களில் தேங்காய்கள் இறக்குமதி செய்வது எதிர்பார்க்கப்படுகின்றது. இது பதப்படுத்தப்பட்ட ஏற்றுமதி உற்பத்திகளுக்கு மாத்திரமே கருத்திற்கொள்ளப்படுகின்றது. ஏற்றுமதி தொழிற்பாட்டு துறையானது இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் மூலம் நன்மை பெறுகின்றது. இது கருத்திற்கொள்ளத்தக்க அந்நிய செலாவனி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றை வழங்கும் இத் தொழிற்துறையின் இழப்பை தடுப்பதற்கு உதவுகின்றது. 

எனினும் ஏற்றுமதி பிரதியீடுகளை பாதுகாப்பதற்காக முறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை பெயரிடல் அவசியமானதாகும். இதனால் நிறுவன அமைப்பானது முன்கூட்டியே வலுப்பெறுவதற்கு படிமுறையான நடைமுறைகளை பிரதானமாக பின்பற்றியது. இங்கு இடைநிலை பதப்படுத்தப்பட்ட உற்பத்திகள் மேலதிக தொழிற்பாட்டு உற்பத்திகளுக்கு மாற்றீடாக தொழிற்படல் முக்கியத்துவமாக கருதப்படுகின்றது. எவ்வாறாயினும் உள்நாட்டு சந்தையில் கடுமையான வழிமுறைகள் மூலம் பெயரிடல் மற்றும் முத்திரையிடல் போன்றன பின்பற்றப்படல் அவசியமானதாகும்.

நீண்ட வரட்சியானது தென்னை விளைச்சல் குறைவுக்கு பிரதான காரணியாகும். இந்நிகழ்வு தொடர்ச்சியாக இடம்பெறுவதால் இதனை புறக்ககணிக்க முடியாதுள்ளது. எனவே தெங்கு செய்கையாளர்களுக்கு நீர்க்காப்பு நடவடிக்கைகளை உள்வாங்குவதற்கு ஊக்கப்படுத்தல் அவசியமாகின்றது. மேலும் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பசளை பிரயோகத்தை மேம்படுத்தல், மண் சீரமைப்பு நடவடிக்கைகள். தேங்காய் விளைச்சலற்ற மரங்களை அகற்றல், எதிர்கால கேள்விக்கான மேம்படுத்தல் நடவடிக்கைகளாக அமைகின்றது. தெங்கு துறையில் தென்னை செய்கையாளர்களுக்கு சாதகமான விலையை, சாதகமான கொள்கையினுடாக உத்தரவாதமளித்தல் முக்கிய செயற்பாடாக கருதப்படுகின்றது. 

தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய்கள், உள்நாட்டு நுகர்விற்கும். தொழிற்துறை தேவைகளுக்கும் முற்றாக பயன்படுத்தப்படுகின்றது. அதிகரிக்கும் சர்வதேச சந்தைகளின் கேள்விக்கான உற்பத்தியை அதிகரிப்பதற்கான சாத்தியத்தை கொண்டுள்ளதை சான்றுகள் பரிந்துரைக்கின்றன. இதற்கு மேலதிகமாக தென்னையின் முக்கியத்துவமானது தொழிற்துறையில் ஏற்பட்ட இடைவெளியை நிரப்பக்கூடியயதாய் உள்ளது. சாத்தியமான புதிய பீடைகள் மற்றும் நோய்களின் அறிமுகத்தினால் ஏற்படும் பாரிய விளைவுகளை கருத்திற்கொள்கையில் தென்னை ஆராய்ச்சி நிலையமானது தனிப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை இணக்கம் எட்டும் வரை தேங்காய் முக்கியத்துவத்தை ஒரு தேர்வாக கருதவில்லை.


தென்னை பயிர்ச்செய்கையின் வீழ்ச்சி

இலங்கையில் இதுவரையில் 21616 ஹெக்டேயர் தென்னை பயிர்ச்செய்கை அழிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தெங்கு உற்பத்தித்துறையை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை கமத்தொழில் சம்மேளனம் மற்றும் தெங்கு உற்பத்தித்துறையை பாதுகாக்கும் சங்கங்கங்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளன.

எதிர்க்காலத்தில் தெங்கு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும், இதனால் தெங்கு சார் உற்பத்தித்துறைகள் பெறும் வீழ்ச்சியை எதிர்நோக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments