இருபதாம் நூற்றாண்டில் உலக நிலப்பரப்பில் ஆறில் ஒரு பங்கினை உள்ளடக்கிய போரசாக ரஷ்யா விளங்கியது. இப்பரந்த பேரரசை நிருவகிக்க முறையான அமைப்புத் தேவைப்பட்டது. அக்காலத்தில் இருந்த ஆட்சியாளர்கள் இராணுவம், காவல் படை, இரகசிய பொலிஸ் ஆகியோரைக் கொண்டு இந்த பரந்த பேரரசை ஆட்சி செய்தனர். இவர்களது ஆட்சி முறை கடினமாக இருந்தது. இந்த ஆட்சிக்குத் திருச்சபையின் தெய் வீகக் கொள்கை மிகவும் சாதகமாக இருந்தது. இந்நிலையில் ரஷ்ய ஆட்சியாளர்களான சார் மன்னர்கள் சர்வாதிகார ஆட்சியாளர்களாகச் செயற்பட்டனர். ரஷ்யாவில் நிலவிய மானிய முறை சமூகப் பொருளாதார முறையில் சனத்தொகையில் 97% மான விவ் சாயிகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட கைத்தொழில் முன்னேற்றம் காரணமாக தோற்றம் பெற்ற தொழிலாள வர்க்கத்தினரும் ஆட்சியாளர்களதும் திருச்ச பையினதும் பிரபுக்களினதும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகினர். படை வீரர்களின் உதவி புரட்சியாளர்களுக்குக் கிடைத்தமை இப்புரட்சியின் சிறப்பம்சமாகும். முதலாம் உலக மகாயுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த இக்காலக்கட்டத்தில் ரஷ்யாவும் இந்த யுத்தத்தில் ஈடுப்பட்டமையானது மக்களை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கியது. இதனால் இந்தப் புரட்சியின் தாரக மந்திரமாக "உணவு, நிலம், சமாதானம்” என்னும் சுலோகம் அமைந்தது. இதனடிப்படையில் 1917 ஆம் ஆண்டு மார்ச், ஒக்டோபர்.ஆகிய மாதங்களில் இரு புரட்சிகள் இடம்பெற்றன. வர்க்க பேதமற்ற சமுதாயத்தைக் கட்டி யெழுப்பும் நோக்கில் வளர்ச்சியடைந்த இந்தப் புரட்சி பற்றி இப்போது பார்ப்போம்.
ரஷ்யப் புரட்சி (Russian Revolution)
இருபதாம் நூற்றாண்டளவில் பிரான்சைப் போலவே ரஷ்யாவிலும் ஊழல்கள் நிறைந்த சர்வாதிகார முடியாட்சி முறையே நிலவியது. ரஷ்யாவை ஆட்சிசெய்த சார் மன்னர்கள் அரச பதவியானது கடவுள் கொடுத்த வரம் எனக் கருதி செயற்பட்டோராவர். தமது நன்மையை மட்டுமே கருத்திற் கொண்டு மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சியை நடத்தினர். அரசாங்க வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு மக்களை கொடுமைப் படுத்தி வரி அறவிட்டனர். சமய படிப்பினையின்படி தெய்வீகக் கோட்பாட்டிற்கு அமையச் செயற்பட்ட மன்னர்கள் சமயத்தில் அதிக கவனம் செலுத்தியதுடன் மக்களின் பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயலவில்லை.
ரஷ்யாவின் பொருளாதார, சமூக முறையை நோக்கில், மானிய முறையை அடிப்படையாகக் கொண்ட விவசாயப் பொருளாதாரமே அங்கு நிலவியது. பாரம்பரிய நில உரிமை பிரபுக்களுடையதாக இருந்தது. நாட்டின் சாதாரண மக்களான விவசாயிகள் நில அடிமைகளாக விவசாயத்தில் ஈடுபட்டனர். பிரபுக்கள் செல்வந்தராக இருந்த துடன் நில அடிமைகள் அவர்களது சொத்தாகக் கருதப்பட்டனர். விவசாயிகள் பிரபுக்களின் நிலங்களில் பயிர் செய்வதன் மூலம் பெறப்படும் விளைச்சலில் ஒரு பகுதியை வரியாக அரசாங்கத்திற்கும் திருச்சபைக்கும் பிரபுக்களுக்கும் செலுத்த வேண்டியிருந்தமையால் அவர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் இன்னல்களுக்கு உள்ளாகினர்.
19 ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவில் பரவிய கைத்தொழில் காரணமாக தொழிலாளர் வர்க்கமொன்றும் அங்கு உருவாகியிருந்தது. தொழிலாளர்களின் நிலை விவசாயிகளின் நிலையை விட உயர்வாகக் காணப்பட்டது. எனினும் அவர்கள் சிறு தொகையினராகவே காணப்பட்டனர். நடுத்தர வகுப்பினரும் சிறு தொகையினராக இருந்ததுடன் அவர்களில் அதிகமானோர் அரசாங்க சேவையாளர் ஆவர். இவ்வாறான நிலைமை அங்கு காணப்படும்போது 1904 - 1905 காலப்பகுதியில் யப்பானுடன் நடை பெற்ற யுத்தத்தில் ரஷ்யா தோல்வியடைந்தது. 1905 ஆம் ஆண்டு எதிர்ப்பு நடவடிக்கை ஏற்பட அது உடனடிக் காரணமாக அமைந்தது. விவசாயிகளின் கிளர்ச்சி, தொழிலாளர் வேலை நிறுத்தம் என 1905 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரச விரோத செயற்பாடுகளில் கடற்படைக் கிளர்ச்சியாளர்களும் சேர்ந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் வெற்றி பெறாத போதிலும் அது அரச விரோத போராட்டங்களுக்கு முன்னோடியாக அமைந்தது.
மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக இணைந்து செயற்படுவதை உணர்ந்த சார் ஆட்சியாளர்கள் அரசியல் சீர்திருத்தங்கள் சிலவற்றை மேற்கொண்ட போதிலும் திருப்தியடையாத மக்களின் அமைதியின்மை மென்மேலும் அதிகரித்தது. அவ்வேளையில் மன்னன் சீர்திருத்தங்களை செயற்படுத்தியதுடன் கடின அடக்கு முறையையும் மேற்கொண்டான். இதனால் கிளர்ச்சியை முன்னெடுத்துச் சென்ற லெனினின் தலைமையிலான போல்ஷெவிக் கட்சி பாராளுமன்றத்திலிருந்து விலகி தமது செயற்பாடுகளை இரகசியமாக மேற்கொண்டன. இதற்கிடையில் 1914 ஆம் ஆண்டு முதலாம் உலக யுத்தம் ஆரம்பமாகியது. ரஸ்யா நேச நாடுகளின் பங்காளியாக யுத்தத்தில் இணைந்தது. இதனால் ரஷ்யாவுக்குப் பல பாதகமான விளைவுகள் ஏற்பட் டன. பெருந்தொகையான விவசாயிகளும் தொழிலாளர்களும் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இது அவர்களின் (விவசாயிகள், தொழிலாளர்கள்) விருப்பப்படி நடைபெறவில்லை. விவசாயம் செய்வதற்குப் போதிய விவசாயிகள் இல்லாமை காரணமாக விவசாயம் வீழ்ச்சியடைந்தது. இக்கால கட்டத்தில் தொழிற்சாலைகளில் அதிகமாக ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டதால் உணவு, மருந்து, உரம் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் உற்பத்தி குறைவடைந்தது. இதனால் நாடு முழுவதும் உணவுப் பற்றாக்குறையும் பொருள்களின் விலை உயர்வும் ஏற்பட்டன. இவற்றில் பாண் விலை அதிகரிப்பானது மக்களை மிகவும் இன்னல்களுக்கு உள்ளாக்கியது. அதன் தாக்கம் 1917 ஆம் ஆண்டு புரட்சியாக வெளிப்பட்டது.
1917 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற புரட்சிக்கு புடைவைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வேலை நிறுத்தமே காரணமாக அமைந்தது, மூன்று நாட்களாகும் போது அது பாரிய வேலை நிறுத்தமாக மாறியது. துன்புற்ற அனைத்துப் பிரிவினரும் அதில் இணைந்து கொண்டனர். வீதி முழுவதும் பாண் கேட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். சார் மன்னனின் படையும் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டது. மன்னரால் மக்களின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் 1917ஆம் ஆண்டு மன்னன் பதவி துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கெரென்ஸ்கி என்ற தலைவரின் கிளர்ச்சி அணியின் கைக்கு ஆட்சி மாறியது. எனினும் அவர்களால் நாட்டின் அத்தியாவசியத் தேவைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை.
விவசாயிகளுக்கு நிலம், படை வீரர்களுக்கு அமைதி, நாட்டில் அனைவருக்கும் உணவு என்பனவே நாட்டின் அத்தியாவசிய தேவையாக இருந்தன. இதனால் விவசாயிகள் நிலங்களை எரித்து, கொள்ளையடித்து, உரிமையாளர்களை அழித்துப் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டனர். புதிய அரசின் ஆட்சியாளர்கள் செல்வந்தருடன் இணைந்து செயற்பட்டமையால் ஏழைகளின் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகியது. அவ்வாறே அரசாங்கம் யுத்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுத்தமையால் படைவீரர்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை.
இதற்கிடையில் லெனினின் தலைமையிலான போல்ஷெவிக் கட்சி சோவியட் மண்டலம் என்ற அமைப்பினை நாடு முழுவதும் நிறுவி விவசாய, தொழிலாள அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கையை மேற்கொண்டது. ரஷ்யப் புரட்சி ஆரம்பிக்கும்போது மென்ஷவிக். போல்ஷெவிக் என்ற இரு அரசியல் குழுவினர் தோற்றம் பெற்றிருந்தனர். பல்வேறு சீர்த்திருத்தங்களின் மூலம் மக்களின் பிரச்சி னைகளைத் தீர்க்க முடியும் என்று கருதிய சிறு தொகையினர் மென்ஷவிக் எனப்பட்டனர். பொதுவுடைமை வாதத்தை ஏற்றுக் கொண்ட போல்ஷவிக் வாதிகள் பெரும்பான்மையாக இருந்தனர். முதலாளித்துவ முறையைத் தவிர்த்தெறிந்து பொதுவுடமைக் கருத்துக்களைக் கொண்ட சமுதாயத்தை தோற்றுவிப்பதே போல்ஷெவிக்வாதிகளின் நோக்கமாக இருந்தது. வெளினதும் ரொஸ்கியினதும் தலைமையில் செயற்பட்ட இந்த அமைப்பிற்கு தொழிலாளர், விவசாயிகள், படைவீரர் முதலான துன்புற்ற மக்களின் ஒத்துழைப்புக் கிடைத்தது. மார்ச் மாதப் புரட்சியின் பின்னர் அமைக்கப்பட்ட தற்காலிக அரசாங்க ல் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது போனமையால் குறுகிய காலத்திலேயே அது பொது மக்களின் வெறுப்புக்கு உள்ளானது. தற்காலிக அரசாங்கத்திற்கு எதிராக எழுந்து வரும் மக்களின் எதிர்ப்பைக் கண்ட வீ. ஐ. லெனின் "இந்த சந்தர்ப்பத்தில் நாம் அதிகாரத்தைக் கைப்பற்றாவிட்டால் வரலாறு எமக்கு இரக்கம்காட்டமாட்டாது.” எனக் கூறினான். இதற்கமைய 1917 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் புரட்சி ஆரம்பமானது. ஆயுதந்தரித்த -படை அரசாங்கத்தின் முக்கிய மத்திய நிலையங்களைக் கைப்பற்றியது. (புகையிரதம், வங்கி, தபால் நிலையங்கள்) வீதிகளெங்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதி, நிலம், நிலம், உணவு என்ற அடிப்படையில் ஆர்ப்பாட்டம் தடாத்தினர்.
தமக்கு அரசாங்கத்தால் பாதுகாப்பு இல்லையென்பதை அறிந்த மத்திய வகுப்பினரும் படை வீரர்களும் ஆர்ப்பாட்டத்திற்கு எவ்வித எதிர்ப்பும் காட்டவில்லை. இந்த எதிர்ப்பிற்கு ஆட்சியாளர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பிரிவினரினதும் ஒத்துழைப்புக் கிடைத்தது. இதிலிருந்து ரஷ்ய மக்கள் அனுபவித்த துன்பத்தை அறியக்கூடியதாய் உள்ளது. இதனால் கடுமையான போரின்றி புரட்சியை வெற்றிக் கொள்ளக்கூடியதாக இருந்தது. உலகில் நடைமுறையிலுள்ள நாட்காட்டியின்படி இந்த நிகழ்வு நடைபெற்றது நவம்பர் மாதமாகும். எனினும் அக்காலத்தில் ரஷ்யாவில் நடைமுறையிலிருந்த பழைய நாட்காட்டியின்படி அது அக்டோபர் மாதமாகும். எனவே இந்தப் புரட்சி 1917 ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சி எனப்படுகின்றது.
கெரன்ஸ்கியின் தலைமைத்துவத்திலான அரசைக் கவிழ்த்து லெனினின் தலைமைத் துவத்திலான போல்ஷெவிக்குகளின் அரசைத் தோற்றுவித்தமை இந்தப் புரட்சியின் முக்கியவிளைவாகும். போல்ஷெவிக்கட்சி பின்னர்பொதுவுடமைக்கட்சியாகமாறியது. லெனினின் தலைமையிலான புதிய அரசாங்கம் ஜேர்மனியுடனாள யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டது. இதன்மூலம் ரஷ்யாவில் சமாதானம் உதயமானது. அது படை வீரரின் எதிர்பார்ப்பாகும். லெனின் தலைமைத்துவத்திலான புதிய அரசாங்கம், நிலமானிய முறையின் கீழ் இருந்த தனிப்பட்ட நிலவுரிமையை நீக்கியது. அரசுடைமையாக்கப்பட்ட அந்த நிலங்கள் ஆரம்பத்தில் விவசாயிகளுக்கு சிறு பண்ணையாகப் பயிரிட அனுமதியளித்த போதிலும் பின்னர் அவற்றை பாரிய விவசாயப் பண்ணையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கமைய விவசா யிகள் கூட்டு உரிமையின் கீழ் பயிர் செய்தனர். இதன்படி விவசாயிகள் எதிர்பார்த்த நிலம் அவர்களுக்குக் கிடைத்தது. பொதுவுடைமை நிருவாகத்தின்கீழ் ரஷ்யாவின் அனைத்துத் தொழிற்சாலைகளும் அரசுடைமையாக்கப்பட்டதுடன் அதன் நிருவாகம் பொதுவுடைமைக் கட்சியின் வழிகாட்டலின் கீழ் தொழிலாளர்களைக் கொண்ட சோவியற் மண்டலத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இவை தவிர வங்கி, போக்குவரத்து என்பனவும் அரசுடைமையாக்கப்பட்டது.
0 Comments