இலங்கைக்கு கிழக்கே உள்ள நாடுகள் (Countries East of Sri Lanka)

இலங்கைக்கு கிழக்கே உள்ள நாடுகள் என்ன?

இலங்கைக்கு கிழக்கே உள்ள நாடுகள்

இலங்கையின் கிழக்கே பல சதுரக் கிலோ மீட்டர்களுக்கு வங்களா விரிகுடா கடல் காணப்படுகின்றது. கடலை அடுத்த அந்தாமான் தீவுகள் மற்றும் சிறு சிறு தீவுகள் காணப்படுகின்றது. அதனை அடுத்து இலங்கையின் கிழக்கே காணப்படுகின்ற நாடுகளாக சுமத்ரா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் காணப்படுகிறது.

  • சுமத்திரா
  • மலேசியா
  • சிங்கப்பூர்
  • தாய்லாந்து
  • இந்தோனேஷியா

சுமத்திரா தீவு

சுமத்திரா தீவு பண்டைய காலங்களில் ஸ்வர்ணத்விப ("தங்கத்தின் தீவு") மற்றும் ஸ்வர்ணபூமி ("தங்கத்தின் நிலம்") சமஸ்கிருத பெயர்களால் அறியப்பட்டது. சுமத்ராவின் பெயரைப் பற்றி முதலில் குறிப்பிடப்பட்ட ஸ்ரீவிஜயன் ஹாஜி (ராஜா) சுமாத்திர் பூமி ("சுமாத்திராவின் அரசர்") என்ற பெயரில் இருந்தது

சுமத்திரா தீவு இந்தோனேசியாவின் மிகப்பெரிய தீவாகும். இது உலகின் ஆறாவது மிகப் பெரிய தீவாகும். இந்தோனேசியாவில் உள்ள இத்தீவின் பரப்பளவு 473,481 சதுர கிலோ மீட்டர்கள் . 2011 இல் இத்தீவில் 50,613,947 மக்கள் வசித்து வருகின்றனர் . சுமத்ரா வடகிழக்கு-தென்கிழக்கு அச்சு குறுக்கிட ஒரு நீளமான நிலப்பரப்பு ஆகும்.

சுமத்ராவின் வடக்கு முனை அந்தமான் தீவுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது, தென்கிழக்கு கடற்கரையிலிருந்து பன்கா மற்றும் பெலிட்டுங், கரீமாட்டா ஸ்ட்ரட்ட் மற்றும் ஜாவா கடல் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

பல வெடிக்கும்  எரிமலைகளைக் கொண்ட புக்கிட் பாரிசன் மலைகள், தீவின் முதுகெலும்பாக அமைந்திருக்கின்றன, வடகிழக்கு பகுதியில் சதுப்பு நிலங்கள்,  மாங்க்ரோவ் மற்றும் சிக்கலான ஆற்று முறைமைகள்  வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ளது.
நில நடுக்கோடு அல்லது புவிமையக் கோடு மேற்கு சுமத்ரா மற்றும் ரியா மாகாணங்களில் அதன் மையத்தில் தீவைக் கடந்து செல்கிறது. தீவின் காலநிலை சூடான மற்றும் ஈரப்பதம் கொண்டதாகும் .

உந்தப்பட்ட வெப்பமண்டல மழைக்காடுகள் ஒரு காலத்தில் நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்தியது. சுமத்ராவில் பரவலான தாவர மற்றும் விலங்கு இனங்கள் உள்ளன, ஆனால் கடந்த 35 ஆண்டுகளில் அதன் வெப்பமண்டல மழைக்காடுகளில் கிட்டத்தட்ட 50% இழந்துள்ளது.சுமாத்திரன் குயில் , சுமத்திரன் புலி, சுமத்ரான் யானை, சுமத்ரான் காண்டாமிருகம் மற்றும் சுமத்திரன் ஆரங்குட்டன் போன்ற பல இனங்கள் இப்போது அபாயகரமான ஆபத்தில் உள்ளன.

தீவின் மீதான காடழிப்பு, அண்டை நாடுகள் மீது கடுமையான பனிப்பொழிவு ஏற்படுவதால், இந்தோனேசியா மற்றும் பாதிக்கப்பட்ட நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே கணிசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளன.


மலேசியா

மலேசியா (Malaysia), தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு கூட்டாட்சி அரசியல்சட்ட முடியாட்சியுள்ள ஒரு நாடாகும். 13 மாநிலங்களையும் மூன்று நடுவண் மண்டலங்களையும் கொண்டுள்ள மலேசியா, தென்சீனக் கடலினால் மலேசியத் தீபகற்பம், கிழக்கு மலேசியா (மலேசிய போர்னியோ) என இரண்டு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மலேசியத் தீபகற்பம் வடக்கே தாய்லாந்து நாட்டுடன் நிலம்; கடல் எல்லைகளையும், தெற்கே சிங்கப்பூர், வடகிழக்கே வியட்நாம், மேற்கே இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் கடல் எல்லைகளையும் கொண்டுள்ளது.

மலேசியாவின் கிழக்கு மலேசியா பகுதி; புரூணை, இந்தோனேசியா நாடுகளுடன் நில, மற்றும் கடல் எல்லைகளையும்; பிலிப்பீன்சு, வியட்நாம் நாடுகளுடன் நில எல்லைகளையும் கொண்டுள்ளது.

மலேசியாவின் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் கோலாலம்பூர் ஆகும். புத்ராஜெயா நடுவண் அரசின் நிருவாகத் தலைநகராகும். 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ள மலேசியா உலகின் 44-வது மக்களடர்த்தி கூடிய நாடாகும். ஐரோவாசியாக் கண்டத்தின் தென்முனையான தஞ்சோங் பியாய் மலேசியாவில் தான் அமைந்து உள்ளது.

வெப்ப வலயத்தில் அமைந்துள்ள மலேசியா 17 பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றான மலேசியாவில் இனப் பெருக்க உயிரினங்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளன. மலேசியாவின் மொத்த பரப்பளவு 329,847 சதுர கிலோமீட்டர்கள் (127,350 சதுர மைல்கள்).

தீபகற்ப மலேசியாவின் மக்கள் தொகை மட்டும் 20 மில்லியன். தற்போது மலேசியாவின் மக்கள் தொகை 2.5 கோடி. இவர்களில் பெரும்பான்மையினர் மலாய் மக்கள். இவர்களுக்கு அடுத்து சீனர்களும் இந்தியர்களும் கூடுதலாக வாழ்கின்றனர். பெரும்பான்மையான மலேசிய மக்கள் இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றுகிறார்கள். இஸ்லாம் மதம் மலேசியாவின் தேசிய சமயமும் ஆகும். மலாய் மொழி தேசிய மொழியாகும்.

1957-ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திடமிருந்து விடுதலை பெற்றது. இப்போது மலேசியாவின் மன்னராக ஐந்தாம் முகம்மது ஆட்சியில் உள்ளார். இருபதாம் நூற்றாண்டில் கூடுதலான பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது.


சிங்கப்பூர்

சிங்கப்பூர் அல்லது அலுவல்முறையாக சிங்கப்பூர் குடியரசு (The Republic of Singapore, சீனம், மலாய், Singapura) தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது, ஜொகூர் நீர்ச்சந்தி இதனை மலேசியாவிடமிருந்து பிரிக்கிறது. தெற்கில் சிங்கப்பூர் நீர்ச்சந்தி இந்தோனேசியாவின் ரியாவு தீவுகளைப் பிரிக்கின்றது. சிங்கப்பூர் பெரிதும் நகரமயம் ஆன நாடாகும். மிகக்குறைவான அளவிலேயே மழைக்காடுகள் உள்ளன. நிலச்சீரமைப்பு மூலம் கூடுதலான நிலங்கள் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ளன.

கிபி 2 ஆம் நூற்றாண்டில் மனிதக் குடியேற்றம் தொடங்கிய நாளிலிருந்து சிங்கப்பூர் பல உள்ளூர் இராச்சியங்களின் பகுதியாக விளங்கி வந்துள்ளது. 1819 ஆம் ஆண்டில் ஜொகூர் சுல்தானகத்தின் அனுமதியுடன் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் சிங்கப்பூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 1824 இல் பிரித்தானியாவின் நேரடி ஆட்சியினுள் வந்தது. 1826 இல் தென்கிழக்காசியாவின் ஒரு பிரித்தானிய குடியேற்ற நாடாக ஆனது. இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியர்களால் சிறிது காலம் ஆக்கிரமிக்கப்பட்ட சிங்கப்பூர் மறுபடியும் 1945ல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்து பிறகு 1963ல் ஏனைய பிரித்தானிய குடியேற்றப் பகுதிகளோடு சேர்ந்து மலேசியாவோடு இணைந்து பிரித்தானியாவிடமிருந்து விடுதலை அடைந்தது. 1965 ஆகஸ்ட் 9 இல் மலேசியாவிலிருந்து பிரிந்து, விடுதலை பெற்று தனிக் குடியரசு நாடாக உருவானது. அன்றிலிருந்து சிங்கப்பூரின் வளம் பெருமளவு விரிவடைந்து நான்கு ஆசியப் புலிகளில் ஒன்றானது.

சிங்கப்பூர் வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையில் ஓரங்க நாடாளுமன்றக் குடியரசு ஆட்சியைக் கொண்டுள்ளது. 1959 ஆம் ஆண்டு முதல் மக்கள் செயல் கட்சி அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது.

கொள்வனவு ஆற்றல் சமநிலையின் அடிப்படையில், சிங்கப்பூரின் ஆள்வீத வருமானம் உலக நாடுகளில் மூன்றாவது நிலையில் உள்ளது. சிங்கப்பூரின் மக்கள்தொகை 5 மில்லியனுக்கும் சற்று மிகுதியாகும். இவர்களில் 2.91 மில்லியன் உள்ளூரில் பிறந்தவர்கள். மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் சீனர்கள். இவர்களுக்கு அடுத்ததாக மலாய், மற்றும் சிங்கப்பூர் இந்தியர்கள் உள்ளனர். சிங்கப்பூரின் அலுவல்முறை மொழிகள்: ஆங்கிலம், சீனம், மலாய் மொழி, தமிழ் மொழி ஆகியவையாகும். ஆசியான் அமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் ஏப்பெக் அமைப்பின் செயலகம் அமைந்துள்ளது. அத்துடன், கூட்டுசேரா இயக்கம், பொதுநலவாய நாடுகள் ஆகிய அமைப்புகளிலும் உறுப்பு நாடாக உள்ளது.

மிகவும் சிறிய பரப்பளவு கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்காசியாவில் மிகச்சிறிய நாடாகும். விடுதலைக்குப் பின் நடந்த பல்வேறு பொருளாதார மாற்றங்களினாலும், அரசின் துணையோடு தன் உள்கட்டுமானத்தினைத் தரப்படுத்திக் கொண்டதாலும், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.


தாய்லாந்து

தாய்லாந்து (Thailand, தாய், தாய் பிரதேசம்), அதிகாரப்பூர்வமாக தாய்லாந்து இராச்சியம் (Kingdom of Thailand), முன்னர் சயாம் என அழைக்கப்படும் நாடு; தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு. இதன் எல்லைகளாக மியான்மர், லாவோஸ் ஆகியன வடக்கேயும், லாவோஸ், கம்போடியா ஆகியன கிழக்கேயும், தாய்லாந்து வளைகுடா, மலேசியா ஆகியன தெற்கேயும், அந்தமான் கடல் மேற்கேயும் அமைந்துள்ளன. தாய்லாந்தின் கடல் எல்லைகளாக தென்கிழக்கே தாய்லாந்து வளைகுடாவில் வியட்நாமும், தென்மேற்கே அந்தமான் கடலில் இந்தோனேசியா, இந்தியா ஆகியனவும் உள்ளன.

மன்னர் ஒன்பதாம் இராமாவின் தலைமையில் அரசியல்சட்ட முடியாட்சி ஆட்சியமைப்பு இங்கு நிலவுகிறது. 1946 இல் முடிசூடிய சக்கிரி வம்சத்தைச் சேர்ந்த ஒன்பதாம் இராமா மன்னர் உலகில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் ஒரு நாட்டுத்தலைவரும், தாய்லாந்து வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் மன்னரும் ஆவார்.[8] தாய்லாந்து மன்னரே அந்நாட்டின் அரசுத் தலைவரும், இராணுவப் படைகளின் தலைவரும், பௌத்த மதத்தை மேனிலைப்படுத்துபவரும், அனைத்து நம்பிக்கைகளுக்கும் பாதுகாவலரும் ஆவார்.

மொத்தப் பரப்பளவின் அடிப்படையில் தாய்லாந்து 51ஆவது நாடு ஆகும். இதன் பரப்பளவு 513,000 km2 (198,000 sq mi) ஆகும். 64 மில்லியன் மக்களுடன் மக்கள்தொகை அடிப்படையில் இது 20வதும் ஆகும். பேங்காக் இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் ஆகும். இதுவே தாய்லாந்தின் அரசியல், வணிக, தொழிற்துறை மற்றும் கலாசார மையமாகவும் விளங்குகிறது. மக்கள்தொகையின் 75% தாய் இனத்தவரும், 14% சீனரும் 3% மலாய் இனத்தவரும் ஆவர். ஏனையோர் மொன், கெமர், மற்றும் பல்வேறு மலைவாழ் இனங்களும் சிறுபான்மையினமாக உள்ளனர். நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி தாய் மொழியாகும். மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 95% மக்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர்.

1985 முதல் 1996 வரை தாய்லாந்தின் பொருளாதாரத்தில் பெரும் ஏற்றம் காணப்பட்டது. தற்போது இந்நாடு முக்கிய தொழில்வள நாடாகவும் ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. தாய் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையும் முக்கிய பங்கு வகிக்கின்றது.



இந்தோனேசியா


இந்தோனேசியா (Indonesia), அதிகார பூர்வமாக இந்தோனேசியக் குடியரசு (Republic of Indonesia) என அழைக்கப்படுவது 17,508 தீவுகளாலான தென் கிழக்காசிய, மற்றும் ஓசியானிய நாடாகும். 33 மாகாணங்களைக் கொண்ட இந்நாட்டில் 238 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதனால் உலகில் மக்கள் தொகை கூடிய நாடுகளில் இந்தோனேசியா நான்காவது இடத்தில் உள்ளது. இது மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டசபையையும், சனாதிபதியையும் கொண்ட ஒரு குடியரசு. சக்கார்த்தா இந்த நாட்டின் தலைநகரம். பப்புவா நியூ கினி, கிழக்குத் திமோர், மலேசியா என்னும் நாடுகள் இதன் எல்லைகளில் உள்ளன. சிங்கப்பூர், பிலிப்பீன்சு, ஆத்திரேலியா என்னும் நாடுகளும், இந்தியாவின் ஆட்சிக்கு உட்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவுகளும் இந்தோனேசியாவுக்கு அயலில் உள்ளன. உலகில் மிகக் கூடிய முஸ்லிம் மக்களைக் கொண்ட நாடு இந்தோனேசியாவே. தென்கிழக்கு ஆசிய நாடுகள் கழகத்தின் தொடக்க உறுப்பு நாடான இந்தோனேசியா, குழு-20 முக்கிய பொருளாதாரங்கள் அமைப்பின் உறுப்பு நாடாகவும் உள்ளது. இந்தோனேசியப் பொருளாதாரம், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் உலகின் பதினாறாவது இடத்திலும், வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் 15 ஆவது இடத்திலும் உள்ளது.

இந்தோனேசியத் தீவுகள், குறிப்பாக சாவகம் 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒமோ இரக்டசு மனிதர்களின் வாழ்விடமாக இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஏழாம் நூற்றாண்டில் இருந்தாவது, இந்தோனேசியத் தீவுக்கூட்டம் முக்கியமான ஒரு வணிகப் பகுதியாக இருந்துவருகிறது. முதலில் சிறீவிசய இராச்சியமும், பின்னர் மசாபாகித்தும் இந்தியாவுடனும் சீனாவுடனும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தன. இப்பிரதேசம் சீனாவுக்கான வணிகப் பாதையில் அமைந்திருப்பதால் வாசனைப் பொருள் வாணிபத்தில் முன்னோங்கிக் காணப்பட்டது. இப்பகுதியை ஆண்ட உள்ளூர் ஆட்சியாளர்கள் பொதுக் காலத்தின் தொடக்க நூற்றாண்டுகளிலிருந்தே பிற பண்பாட்டு, சமய, அரசியல் மாதிரிகளை உள்வாங்கி வந்தனர். இதனால், இப்பிரதேசத்தில் இந்து மற்றும் பௌத்த இராச்சியங்கள் செழித்திருந்தன. மத்திய காலத்தில் இப்பிரதேசம் இஸ்லாமிய ஆதிக்கத்துக்குள்ளானது. இந்நாட்டின் இயற்கை வளங்களால் கவரப்பட்ட வெளிநாட்டு வல்லரசுகள் இந்தோனேசிய வரலாற்றில் செல்வாக்குச் செலுத்தின. கண்டுபிடிப்புக் காலம் என வழங்கப்பட்ட காலத்தில், மலுக்குத் தீவுகளின் வாசனைப் பொருள் வணிகத்தின் தனியுரிமைக்காக ஐரோப்பிய வல்லரசுகள் போட்டியிட்டதுடன், கிறித்தவ மதத்தையும் இப்பகுதியில் அறிமுகப்படுத்தின. இப்பிரதேசம் சுமார் மூன்றரை நூற்றாண்டுகள் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கீழ் நெதர்லாந்தின் காலனித்துவப் பிரதேசமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது சிறிது காலம் யப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த நாடு 1945 இல் தனது விடுதலையை பிரகடனப்படுத்தியது. ஒன்றுபட்ட சுதந்திர இந்தோனேசியா 1949 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவை 1953 இல் அங்கீகரித்தது.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments