கடலோரத்தில் ஆமை ஒன்று வசித்து வந்தது. அது. கடற்பறவைகள் வானில் பறப்பதைப் பார்த்தது. 'தனக்கு இதுவரை யாருமே பறக்கக் கற்றுத்தர வில்லையே' - என்று வருந்தியது.
இருந்தாலும், தானும் பறவைகள்போல் வானில் பறக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் ஆமைக்கு குறைந்த பாடில்லை.
அது ஒருநாள், கடற்பறவைகளிடம் சென்றது. தானும் வானில் பறக்க வேண்டும் என்ற ஆசையை அப்பறவை களிடம் கூறியது.
ஆமை கூறியதைக் கேட்ட இரண்டு நாரைகள் ஆமையின் மீது இரக்கம் கொண்டன. அவை ஆமையிடம்,
'ஆமையே! ஒரு குச்சியின் நடுப்பாகத்தை நீ வாயால் உய்வில் கொள்ள வேண்டும். நாங்கள் இருவரும் அந்தக் ருசியின் இரு மு ைகளைக் கவ்விக் கொள்வோம். நாங்கள் இருவரும் பறந்து எசல்லும்போது, நீயும் எங்களோடு சேர்ந்து பறக்கலாம்" என்று யோசனை தெரிவித்தன. அதைக்கேட்ட ஆமையும் மகிழ்ச்சி கொண்டது.
உடனே நாரைகள் ஆமையை நோக்கி, 'ஆமையே! முக்கியமாக நீ மற்றொன்றையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் பறந்து செல்லும் வழியில் எந்தக் காரணம் கொண்டும் வாயைத் திறக்கக் கூடாது!" -என்று கூறின. ஆமையும் அதற்கு ஒப்புக் கொண்டது.
அதன்படி, நாரைகள் குச்சியைத் தூக்கிக் கொண்டு பறந்தன. குச்சியின் நடுவில் ஆமையும் தொங்கிக் கொண்டு பறந்தது. அவ்வாறு அவை பறந்து செல்லும்போது ஒரு கிராமத்தின் வழியாகப் பறந்தன. அந்த கிராமத்துச் சிறுவர்கள்.
இரண்டு நாரைகள் ஆமையைத் தூக்கிக் கொண்டு செல்வதைக் கண்டனர். அவர்கள் ஆமையைக் கண்டு கேலி பேசிச் சிரித்தனர்.
சிறுவர்கள் தன்னைக் கேலி செய்வதைக் கண்ட ஆமைக்குக் கோபம் வந்தது. அது, பதிலுக்கு சிறுவர்களைக் கோபத்தில் திட்ட நினைத்தது. எனவே, ஆமை வாயைத் திறந்தது.
ஆமை வாயைத் திறந்த மறுநொடியே, குச்சியின் பிடி நழுவி கீழே விழுந்தது. நீதி: நம் மீது அன்பு கொண்டவர்கள் நமக்குக் கூறும் அறிவுரையை ஒருநாளும் மீறக் கூடாது.
நீதி: "நம் மீது அன்பு கொண்டவர்கள் நமக்குக் கூறும் அறிவுரையை ஒருநாளும் மீறக் கூடாது"
0 Comments