பண்பாடு என்பது பண்பட்டநிலை. அதாவது எண்ணமும், சொல்லும், செயலும் திருந்திய நிலை. பண்பாட்டின் வளர்ச்சியில் பல படிநிலைகள் உள்ளன. தனி மனித உணர்வுகளும் செயல்களும் பழக்கவழக்கங்களும் பண்பாட்டு வளர்ச்சியில் ஒரு நிலையாகவும், மனிதர்கள் ஒன்றாகக் கூடி வாழ்வதால் உண்டாகும் பண்பட்ட முன்னேற்றம் இன்னொரு நிலையாகவும், பல சமூகங்கள் சேர்ந்து ஒரு சமுதாயமாக இணைந்திருக்கும் போது ஏற்படும் வாழ்க்கை நெறி. பழக்க வழக்கங்கள். கலையுணர்வு, ஆகிய அனைத்தும் இணைந்து ஒருவகைச் சமுதாய சிந்தனை வெளிப்படுவது இன்னொரு நிலை. பண்பாடானது பதப்பட்டு செம்மை நலமுறுதலே பண்பாடு. "மக்களின் பழைய வரலாற்றில் அவர்கள் இயற்றிக் கொண்ட கருவிகள். சமூகப்பழக்கம், வழக்கம், நம்பிக்கை. சமயம் முதலியவற்றைப் பண்பாடு என்ற சொல்லால் குறிக்கின்றனர். மக்களின் அறிவு நலம், ஒழுக்க உயர்வு. கொள்கை நலம், பண்பு நலம். வாழ்க்கை நலம் ஆகியவை மென்மேலும் திருந்திய நிலையே பண்பாடு எனலாம்" (1999: பக். 5-6) என குறிப்பிடுகிறார் அ. தட்சிணாமூர்த்தி.
'உயரிய பண்பாடுகள் உலகம் முழுவதற்கும் பொதுவானதாகும். மாந்தர் தம் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், கலையுணர்வுகள், நீதி நெறி முறைகள். வழிபாட்டு நெறிகள், முதலானவற்றில் அவர்தம் பண்பாடு மிளிரும். மக்களை மாக்களினின்றும் வேறுபடுத்திக் காட்டுவதும் அவர்தம் பண்பாட்டுக் கூறுகளேயாகும்" (1991:ப.32) என்று இ. சுந்தர மூர்த்தி குறிப்பிடுகிறார்.
நாகரிகம் (Civilization) என்பது மானிடத்தின் புறத்தோற்றத்தையும், பண்பாடு என்பது மானிடத்தின் அகத்தோற்றத்தையும். விளக்கிக் சொற்களாகும்" (2015: ப.20) என பொ. மா. பழனிச்சாமி கூறுகின்றார். கூறும்
"மானிடவியலார் பண்பாடு என்பதனுள் அனைத்துப் பழக்கங்கள், மரபுகள். மக்களின் நிறுவனங்கள். உற்பத்திப் பொருட்கள் அவற்றின் தொழில்முறைகள் போன்ற எல்லாவற்றையும் உள்ளடக்குகின்றனர்" (1989-81: ப. 166) என்று ஆ. செல்லபெருமாள் குறிப்பிட்டுள்ளார்.
"உலகம் முழுவதும் எண்ணிலடங் வகைகளில் பரவி வாழும் சமுதாயங்களின் பண்பாட்டைக் காலப்பரிமாணங்களுடன் ஆராயும் மானிடவியல் (பிரிவே பண்பாட்டு மானிடவியலாகும்" (1999, ப. 110) என்று பக்தவத்சல பாரதி குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சமுதாயத்தில் பெரும்பாலானோரால் பின்பற்றப்படும் பண்பாட்டு நெறிகளே அச்சமுதாயத்தை உயர்த்துகின்றன அல்லது தாழ்த்துகின்றன. சமுதாயமே அச்சமுகாயத்தில் பிறந்த மனிதனின் பண்புகள். பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை தீர்மானிக்கின்றன. ஒரு பிறப்பிலிருந்து அவன் எந்தப் பழக்க வழக்கங்களிடையே பிறந்தானோ அவை அவனது அனுபவத்தையும், நடத்தையையும் வடிவமைக்கின்றன. சமுதாயப் பழக்கவழக்கங்கள் அவனுடைய பழக்கவழக்கங்கள் ஆகின்றன" (1995: ப. 16) என்று ப. அறவாணன் குறிப்பிடுகிறார்.
"பண்பாடு என்பது இன்றைய மானிடவியலின் அடிப்படைக் கருத்தாக்கமாகும். பண்பாடு என்பது மனிதனின் சமூகமரபு என்றும் மனிதன் உருவாக்கியுள்ள சுற்றுச்சூழல் என்றும் குறிப்பிடப்படுகிறது" (1997:ப. கூறியுள்ளார். 139) என்று தே.லூர்து
"பண்பாடென்பது ஒரு தலைமுறையினர் சென்ற தலைமுறையினரிடம் பெற்றுக் கொண்ட வாழ்க்கை முறையாகும். ஒரு சமுதாயத்திலுள்ள மக்கள் வாழ்க்கையை நடத்தும் முறையே பண்பாடாகும். இதுதான் மானிடவியல் அல்லது சமூகவியல் பண்பாட்டுக்கு கூறும் இலக்கணமாகும்" (1973: ப.20) என்று இரா. கலம்பகம் குறிப்பிடுகிறார்.
"குறிப்பிட்ட மக்கள் குழுவினரின் பழக்கவழக்கங்கள் அனைத்தையும் பண்பாடு என்ற சொல்லால் குறிப்பது சமூக மானுடவியலார் வழக்கம்" (1991:ப.1) என்று ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழிவழியாகக் கற்றறிந்த நடத்தை முறைகள் வழியே நம்முடைய வாழ்வு வடிவமைக்கப்படுகிறது என்பதை உணர்த்துவதே பண்பாடு என்பார் மானிடவியலர்கள்" (2005: ப.65) என்று ஜான் மேகன் - பீட்டர் ஜஸ்டர் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். பண்பாடானது நாட்டுக்கு நாடு மாறுபட்டவையாகக் காணப்படுகிறது. படிமலர்ச்சி நிலையில் காலகட்டங்களைக் கடந்துச் செல்லும் போது பண்பாட்டின் செயல்கள் மாற்றமடைந்தோ அல்லது இழக்கவோ செய்யலாம். மனித குல பொருள்சார் பண்பாடானது கற்காலம், செம்புகாலம், இரும்பு கால நிலையில் வளர்ச்சியடைந்து பொருள்சாராப் பண்பாட்டில் திருமணம், குடிவழி, தாய்தலைமைச் சமூகம். தந்தை வழி சமூகமாக மாறுபட்டதற்கான பண்பாட்டு படிமலர்ச்சியை அறியமுடிகிறது.
0 Comments