வேலுநாச்சியார் வரலாறு
1762 வது ஆண்டு இந்திய நாடு கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலேயருக்கு அடிமையாகி கொண்டிருந்தது சிவகங்கைச் சீமையின் மீது ஆங்கிலேயர்கள் உடைய பார்வை விழுந்தது சிவகங்கையை கைப்பற்றி தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்தார்கள் ஆனால் சிவகங்கை அரசர் முத்து வடுகநாதர் ஆங்கிலேயரின் எந்த ஒரு முயற்சிக்கும் உடன்படவில்லை பல முறை போர் தொடுத்தும் தோல்வி கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்னர் 1770 ஆண்டில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் சூழ்ச்சி செய்து கொலை செய்கியப்படுகின்றார் இந்த செய்தி மருது சகோதரர்கள் மூலமாக அவருடைய மனைவியான ராணி வேலுநாச்சியார் உடைய காதுக்கு வந்தது அந்த சூழ்நிலையில் உடனடியாக போர் தொடுக்க முடியாது புத்திசாதுரியமாகத்தான் செயல்பட வேண்டும் அதனால் திரும்பி வருவேன் எனது சமஸ்தானத்தையும் மக்களையும் மீட்பேன் என்று சபதம் ஏற்று தன்னுடைய சிறு பெண் குழந்தையுடன் சிவகங்கையில் இருந்து வெளியேறினார் வேலுநாச்சியார்.
அடுத்த ஒரு வாய்ப்புக்காக பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது அதுவரை மாறி மாறி பல இடங்களில் தங்க வேண்டியிருந்தது போருக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருந்தது ஹைதர் அலி உதவியில் ஒரு பெரிய படையை உருவாக்கினார் மறிறும் மருது சகோதரர்கள் தலைமையிலும் தனிப்படை அமைத்து வீரப்பன் குயிலி உடைய தலைமையில் பெண்கள் படை அமைத்து சிவகங்கைக்கு இளைஞர்களின் புரட்சிப்படை எல்லாம் தயார். பலவருடங்களின் பின்னர் சிவகங்கை மறுபடியும் கைப்பற்ற வேண்டும். சிவகங்கை காளையார்கோவில் யுத்தம் நடக்கனும் என்று முடிவெடுத்தனர். போர் நடாத்துவது சாதாரண காரியம் என நினைக்ககூடாது அந்த எட்டு ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் அசுர வளர்ச்சி அடைந்திருந்தத அவங்கள வேல்லணும் என்றால் ஒரு பெரிய யூகமே தேவைப்படும் நாம் எல்லாருமாக சேர்ந்து அப்படி ஒரு யுத்தத்தை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
நாட்டிலுள்ள பலவீனமாணவர்கள் யாரும் அதை யுத்தத்தால் பாதிக்கப் படக்கூடாது என குழந்தைகள் முதியவர்கள் நோயாளிகள் பலகீனமானவர்கள் எல்லாரையும் மிகச் சாதுரியமாக திட்டமிட்டார்கள் சொந்தக்காரர்கள் ஊருக்கு போகிறோம் கோவில் திருவிழாவுக்கு போகிறோம் நோய்க்கான மருத்துவரைப் பார்க்கப் போறோம் சொலலி இந்த மக்கள் எல்லாரும் அந்த ஊரில் இருந்து வெளிய வந்திடலாம் அதே நேரத்துல மாறுவேடமிட்ட ராணி வேலு நாச்சியாரின் போர்வீரர்கள் கொஞ்சம் கொஞ்சமா இந்த மக்களுக்கு பதிலாக ஊருக்குள்ள வந்துருவாங்க அதுவும் மறைத்து வைக்கப்பட்ட போர் கருவிகளுடன் இது எதுவுமே ஒரே நாளில் ஒரே மாதத்தில் நடக்ககூடிய விடயம் அல்ல ஆறு மாத காலம் கொஞ்சம் கொஞ்சமா இது எல்லாமே நடந்தது அங்கிருந்த மக்கள் குறையவோ கூடவோ இல்லாததனால் ஆங்கிலேயர்களுக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை இதுதான் ராணி வேலுநாச்சியார் கடைப்பிடித்த போர் தந்திரம்.
திட்டமிட்டபடி போர் காளையார்கோவில் யுத்தம் நடந்தது. நடந்தது ஹைதர் அலியின் படை உதவி மருது சகோதரர்களின் தனிப்படை வீரப்பன் குயிலியின் சாகசம் உயிர்த்தியாகம் ராணி வேலு நாச்சியாரின் போர் ஆலூமை என எல்லாமாக சேர்ந்து ஆங்கிலேயர்கள் வீழ்த்தப்பட்டார்கள் ஆங்கிலேயர்களிடம் இருந்து சிவகங்கை மீட்கப்படுகிறது. தான் எடுத்த சபதத்தை நிறைவேற்றி மீண்டும் சிவகங்கைக்கு ராணியாக முடி சூடுகிறார் வீரமங்கை வேலுநாச்சியார்.
இக்கதையின் மூலம் நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றாள் அதாவது தன்னுடைய நாட்டு மக்களை வெளியே அனுப்பிய அதே நேரத்தில் அதற்குபதிலாக பலமுள்ள போர் வீரர்களையும் ஆயுதங்களையும் உள்ளே அனுப்பி போரில் வெற்றியடைந்தார். அதேபேன்று எமது முயற்சியை, திட்டத்தினை ஒரே நாளில் அல்லது சிரிது காலத்திற்குள் வெற்றி கொண்றிட முடியாது. வீரமங்கை வேலுநாச்சியார் எவ்வாறு போர் உத்தியை கையாண்டு வெற்றி பெற்றாரோ அதேபோன்று எமது முயற்சியினை பலயினத்தை வெற்றிகெள்ள வேண்டும்.
0 Comments