உன்னை முத்தமிட்டு விடிகிறது என் காலை!!
நீ இல்லாமல் என் இரவுகள் இருந்ததில்லை!!
உன்னோடு உறவாடாமல்நான் உறங்கியதில்லை!!
உன்னைக் காயப்படுத்த
எள்ளளவும் எனக்கு விருப்பமில்லை..
அதனால்... காதணி அணிவதில்லை
நான் இரவுகளில்.....
என் கருத்துக்கு எதிர்கருத்து இருந்ததில்லை
எப்போதும் உன்னிடம்... அதனால் ...
என் துக்கம் என் சந்தோஷம்
என் கோபம் என் அழுகை
மொத்தமும் உனக்கு அத்துப்படி....
என் கண்ணீர் உன்னோடு கலந்து
அதிலிருந்து வரும் வாசம் எனக்குத் தூக்கமருந்து...
என் ஒவ்வோர் நாளின் எதிர்ப்பார்ப்பும்
உன்னோடு உறவாடும் அந்த நொடிகள் மட்டுமே!!
அந்த நாளில்.. நான் பேசிய அனைத்தும்
உனக்கும் எனக்கும் மட்டும் தெரிந்த இரகசியம்...
நீ என் இரகசியத் தோழி தலையணை
நன்றி - Cordeliya
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 تعليقات