தமிழ் கவிதை தன்னெஞ்சு அறிவதே மெய் Tamil Kavithai Thannenju Arivathey Mei - நா. தியாகராஜன்

தமிழ் கவிதை தன்னெஞ்சு அறிவதே மெய் Tamil Kavithai Thannenju Arivathey Mei - நா. தியாகராஜன்


வித்தைப் பலக்கற்று

விஞ்ஞான தேரேறி

வேற்றுக் கிரகத்தின்

வேர்களை அறிந்தாலும்


அத்தனையும் மெய்யென்று

அறிவியலும் ஏற்றிடுமா?

அடுத்தநொடி வேறொன்றாய்

ஆரம்பப்புள்ளி காணும்


நேற்றுவரை மெய்யென்று

நெஞ்சுயர்த்தி பேசியதும்

நிதர்சனங்கள் மாறுகையில்

நெருடலுக்கு உள்ளாகும்


எப்பொருள் யார்சொன்னாலும்

மெய்ப்பொருளை காண்கவென்று

மேட்டுக்குடி வித்தகரெல்லாம்

மேதினியில் பறைந்தாரே


விஞ்ஞானம் சொன்னசேதி

வினாடியில் மாறுகையில்

மெஞ்ஞானத்தை அளவிடும்

மிகைவழி எதுவாகும்?


நெஞ்சில் அறம்கொண்டு

நேர்மை வழி நடப்பதே

எந்நாளும் நீதியென்று

நிறைமாந்தரும் சொல்வாரே


நன்றி - நா. தியாகராஜன்


வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.









Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات