பார்வை கொண்டே பாரினில்
பலவற்றை பறைசாற்றிட முடியும்
உண்டாரா? உறங்கினாரா?
உடமையை, உறவை இழந்தாரா?
உள்ளத்தில் ஏதும் தீதா? நன்றா?
உணர்வில் ஏதும் (தடு)மாற்றமா?
உதடுகள் சொல்ல மறந்ததையும்
உரைக்கல்லாய் உரைத்திடும் விழியே
உலகத்தின் பார்வைக்கே
உபயம் இத்தனை என்றால் - அன்று
உரியவளின் ஊமைவிழிகள் சொன்னதும்
ஒன்றா? இரண்டா?
மோகமென்பதா? மோகனமென்பதா?
மோதிய உன் பார்வையில்
மூழ்கிப்போனேன் நான் என்பதா?
"மை"விழியாள் பார்த்த பார்வையிலே
"பொய்"மொழிகள் ஏதும் இல்லை
தையல் கொண்ட பார்வையோ
தைத்ததடி என் நெஞ்சில்
ஊனிலும், உயிரிலும் சேர்ந்திடவே
உடன்பட்டேன் நான் என்று
உன்னையன்றி வேறொருத்தி
உரைத்திடவும் முடியாதே
உயிர்கொண்ட முதல் பார்வையிலேயே
நன்றி - நா. தியாகராஜன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 تعليقات