மென்மையானவளே
அடி மென்மையானவளே
வன்மையான நான் இன்று
தன்மையானேன் உனைக்கண்டு
நீ நடந்த இடமெல்லாம்-உன்
கால் தடங்கள் தேடுகின்றேன்
காணாத அதைக்கண்டு-பெண்
மென்மை உணருகின்றேன்
கால் தடமே பதியாத-உன்
மென்மையான மிதிப்பெல்லாம்
மயில்தோகை வருடல் தானே
உனைத்தாங்கும் பூமிக்கு
மென்மையான மழைத்துளிகளும்
உனக்கு வலி ஏற்படுத்தும் என்றோ
குடைபிடித்துத்தடை விதிக்கிறாய்
மழைத்துளிகளுக்கு
சொல்லடி மென்மையானவளே
உனைத்தழுவி இன்புறவே-வான்
மழைத்துழிகள் விரைகின்றன
நீ குடைகொண்டு தடைவிதித்ததால்
மனம்சிதறி அலைகின்றன
உன் குடையில் பட்டு சிதறிடும்
மழைத்துளிகளைப்போல
நானும் சிதறிடுவேன்-நீ
என்னைப்பார்க்காமற் சென்றால்
நன்றி - யோ.கௌரீசன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
1 تعليقات
أزال المؤلف هذا التعليق.
ردحذف