விண்முட்டும் கனவுகளுடன்
வந்திறங்கிய மருமகள்
கூட்டைப் பிரிந்த
குருவியாய்த் தவித்து
வட்டமிடும் வான்நிலாபோல்
வாழ்நாள் மலரும் வேளையிலே
சுற்றியிருந்த சுற்றத்தார்
மலடி எனும் பட்டத்தைத்
தானமாய் வழங்க
கூட்டுக்குருவியின் இறக்கைகள்
உடைபட்ட பொழுது அது!
சொல்லவொண்ணாத் துயரினிலே
துடித்திருந்த வேளையிலே
அத்தையின் சினத்தால்
ஓடி ஓடி மருத்துவமனையில்
தாராளமாய் செலவிட்ட
தொகைகளுக்கெல்லாம் வட்டியாய்
வசனம்பாடும் குடும்பத்தார்!
மண்டியிட,இறைவனெல்லாம்
கைவிரித்த வேளையிலே
என் அழுகைப்பணி
முழுநேர வேலையானதேன்!
இப்பிறவியில் வரம்வாங்கிய
ஒருநாள் வந்ததே!
மலடியின் நெஞ்சம்
மனதார வணங்குகிறது
இறைவா நன்றி!
தானமாய்வந்த மலட்டுப்பட்டம்
தானாய் சென்றது
சுற்றத்தார் கும்பலில்
மீண்டும் முளைக்கிறது சிறகு
கற்பனையில் கட்டிய
கோட்டைக்குத் தூசுதுடைத்து
புதுச்சாயம் பூசுகிறது
புதுத்தாயின் மனம்!
இளமுத்தே! சிப்பிக்கு உயிரீந்த
என்மகனே! என் மகனே!
நன்றி - நா.சரஸ்வதி
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 تعليقات