அப்பாவிற்கு கவிதை எழுதத் தெரிந்த முதல் கவிஞர்
அடுத்த நொடி நிலையில்லா வாழ்வை சொல்லித்தந்தவர்
நின் வரிகளை கேட்கையில்தான்
கலப்படமில்லா காற்றை உணர்கிறேன்
ஆம் கவிதைகள் பொய்மட்டுமே
இல்லையென ஏற்கிறேன்
வாசகனின் வாயில் நின் ஒவ்வொரு
கவியும் தேன் மிட்டாய்தான்
சமூகத்தின் மேல் நின்
அக்கறை பெருந்தகைதான்
எல்லோர் காதுகளையும் தினம்
அறைந்து கொண்டேதான் இருக்கிறாய் - அதில்
வலியும் வழியும் கிடைத்துக்கொண்டேதான் இருக்கிறது
கனமான இதயங்களையும் கனிசமாய்
உப்புக்கரைசலில் நனைப்பதில் மேதை - நீ !
தாயின் தாலாட்டில் நித்தம் நிலைத்திருக்கும் தேவதை - நீ//
முற்கள் கிடக்கும் பாதையை
மூன்றே (ஹைக்கூ) வரிகளில் முறியடித்தாய்
காதலெனும் போதையை கானமாக தந்துவிட்டாய்
நீ இருக்கும் வரை காகிதங்கள் உயிர்பெற்றது
அக்கரைபட்ட காகிதமே இன்னும்
உன்னை உணர்த்துகிறது
காஞ்சிபுரத்து கழுகே
காற்றோடு கதைபேச கற்றுக்கொண்டேன்..!
நின் பாடலில் மட்டுமே
ரசனையோடு இறந்து பிறக்கிறேன்...
நன்றி - நா முத்துக்குமார்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 تعليقات