யாராவது என்னை
காணோம் என்று நினைத்தால்
அவர்கள் முன்னாடி போகிறேன்,
நீ மட்டும் என்னுடைய
முன்னாடி வந்து நின்றால்
மயக்கத்தில் காணாமல் போகிறேன்!
உன் நினைவாலே தூங்க
முடியாமல் தினமும்
எனக்குள் கொட்டாவி,
உன்னை நினைக்காமல்
ஒரு நாளும் தூங்கி
விட்டால் உள்ளிருந்து
என்னை கொட்டுது என் ஆவி!
அவள் கால்தடம் பதிந்த
இடம் மேலே நான்
கால்பதித்து நடக்கிறேன்,
அந்த வெளிர் தாமரை
பதித்த பாதச் சுவட்டால்
இன்று காணாமல்
போனது என் பாதத்தில்
இருந்த படர் தாமரை!!
உனக்கு அடிக்கடி என்னுடைய
நியாபகம் வரவேண்டி நான்
செய்யும் அடி பிரதட்சணம் இது!
"அடியே" என்ற வார்த்தை அர்த்தம்
இன்று அடியோடி புரிந்து விட்டது!
நன்றி - நா. பாலா சரவணாதேவி
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 تعليقات