இரண்டரை மணி நேரம் தேர்வு எழுதிய பிறகு
வியர்த்து உலர்ந்த அவளின் பளிங்கு கைகளில்
அகப்பட்ட மை பேனாவுக்கு குளிர் காலம்...
ஒரு வழியாக எழுதி முடித்து
பெருமூச்சு விட்ட போது...
சீவிய பென்சில் துகளுக்கு வெயில் காலம்...
தேர்வு அறையை விட்டு வெளியேறி
கட்டாய வினா ஒன்றை மறந்தது நினைவுக்கு
வந்தவுடன் அவள் கண்களில் மழைக்காலம்..
அழுது சிவந்த மூக்கின் நுனியில் முன்பனிக்காலம்...
இவ்வளவு காலங்கள் அடங்கிய பெண்ணுக்கு
காய்ச்சல் வந்தது... இமய மலையுடன் சேர்ந்து
கடவுளும் கரைந்தான் உஷ்ணத்தால்...
நன்றி - Naveen
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 تعليقات