மனிதர்கள் பரபரப்பாக
இயங்கிக் கொண்டிருந்த
காலை நேரம்
கைக்கடிகாரத்தையும்
பேருந்தின் வருகையையும் பார்த்தபடியும்
முகத்தில் பூத்த
வியர்வைத் துளிகளை
கைக் குட்டைக்கு தந்த படியும்
நின்றிருந்தேன்
அந்த நிமிடம்
என் ஆடையைத் தீண்டினாள்
யாரென பார்த்தேன்
காலில் விழுந்தாள்
காலடி தள்ளி நின்றேன்
பசியை உணர்த்தினாள்
கைக்கு அகப்பட்ட
காசுகளை அளித்தேன்
மூக்குச் சளியை
அழுக்குப் பாவாடைக்கு
அளித்து விட்டு
புன்னகை மலரை
தூவிச் சென்றது
வருங்காலப் பிஞ்சு!
நன்றி - G.Banumathi
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 تعليقات