என்னையே பார்த்து பார்த்து
உன்முகம் மறந்து நான்தான்
நீ என நினைத்து கொள்கிறாய்!
எனக்கு பிடித்த யாவையும் நான்
கண்டு அறியும் முன்னே உனக்கும்
பிடித்ததாய் மாற்றிக் கொள்கிறாய்!
என் கண்கள் பார்த்தே என்
மனதில் உள்ள விருப்பு
வெறுப்புகளை படித்து விடுகிறாய்!
என்னுடைய முகம் பார்த்தே நான்
பேச வந்த வார்த்தைகள்
யாவையும் பேசி விடுகிறாய்!
நான் தோற்று விட்டதாய் இந்த
உலகம் சொன்ன போதெல்லாம்
உன் தோளில் என் முகம் சாத்தி
புதுசக்தியை என்னுள் தருகிறாய்!
வருத்தத்துடன் உன் அருகில் வந்த
போதெல்லாம் உன் புடவை வாசனையால்
இந்த மனதுக்கு வசந்தம் தருகிறாய்!
தாயே! நீ கொடுத்த முத்தத்தில்
இருந்த எச்சிலின் ஈரம் இன்றும் உள்
நின்று உயிரைத் தொட்டு வருவதால்தான்
இன்னும் நல்ல மனிதனாக வாழ்கிறேன்!!
நன்றி - நா. பாலா சரவணாதேவி
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
1 تعليقات
Beautiful lines
ردحذف