நேரம் பனிரெண்டு தார்சாலையில்
தனியே மூதாட்டி ததும்பிக்கிடந்தாள் !
எழுபதிருக்கும் எழுவதற்கு மூன்றாவதாய் ஒரு கால் முழுத்தேவைதான் ,
முடியாமல் மகிழ மரத்தடியில் அமர்ந்தபடியே உயிர்மூச்சி விட்டாள் !
கண் வேர்த்து, கொஞ்சம் பூத்து நிறைந்திருந்த மகிழம்
குடையாய் நன்நிழல் தந்தது,
விட்ட பெருமூச்சு பொருமையாகத்தான் வெளிவந்தது !
ஆனாலும் காற்று கடிவாளமிட்டு, சூராவளியாய்
சாலையை வளம் வந்தது,
காகதிமாய் பூக்கள் தாரில் தரித்து விழுந்தது
அன்னாந்து பார்த்தால் எழும்புக்கூடாய் மரம் நின்றது,
செக்கச் சிவந்த சூரியன் அவள் முகத்தில் முத்தமிட்டது,
வியர்வை மார் நடுவே வழி செய்து ஊற்ரெடுத்தது,
மகிழம் அவளை வெறைக்கப் பார்த்துக்கொண்டே வாடியது
மூதாட்டி தாகத்தில் தவித்து தலைகவிழ்ந்தாள்,
மகிழம்பூக்கள் இரண்டு காதலர்களால்
கால்மிதிபட்டு சிவப்பு இரத்தம் தெரிக்க பகுதி இறந்தும்,
மின்வாகனங்களால் மீதி நசுங்கியும் கொலை செய்யப்பட்டது...
மூதாட்டி சாலையோரம் இறந்து கிடந்தால்
மகிழம் சாலையிலேயை மாண்டுபுதைந்து விட்டது !
நீங்கள் சூரியன் நான் வெற்று மரம்....
நீங்கள் காதலர்கள் நான் மின்வாகனம்.....!
நன்றி - த அருண்பிரசாத்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 تعليقات