உன்னை வயிற்றில் ச்சுமப்பதற்கே
ஆயிரம் தவம் செய்து
வரம் வாங்கி வந்தவள் நான்!
உன் உருவம் அறியாத பொழுதே
உன்னை உயிராய் சுமந்தவள் நான்!
உன்னை சுமக்கும் பத்து மாதங்கள்
பசியை, ருசியை மறந்தேன் நான்!
நீ உருவான நாள் முதல்
என் உறக்கத்தை தியாகம் செய்தேன் நான்!
நீ தான் என் உலகம் என்று
உன்னையே சுற்றிக் கொண்டிருப்பவள் நான்!
உன் மகிழ்ச்சிக்காக உழைக்கும்
உன்னத மனசுக்கு சொந்தக்காரி நான்!
தனக்காக வாழாமல் உனக்காக
வாழும் அற்புதம் நான்!
என் அருமை உணர்ந்தால் நீர்
நான் செய்த வரம்!
உனக்கு உயிர் கொடுத்த கடவுள்
உன் உயிருக்கு ஆபத்து என்றால்
என் உயிரை தந்து உன்னை காக்கும் தாய்!
பிரசவம் மரணத்தின் விளிம்பில்
நின்று மாணிக்கம் உன்னை பெற்றவன் நான்!
மானத்தை காக்கும் பொக்கிஷமாய்
பூட்டி வைத்திருந்த தன் மார்பகத்தை
உனக்கு அமிர்தம் ஊட்டும்
அட்சய பாத்திரமாக மாற்றியவள் நான்!
நீ பசியாற மார்பகத்தை பக்குவமாய்
வைத்தாலும்முட்டி மோதி சப்பி குடிக்கும்
தாய்பால் உன் உச்சி முதல் பாதம் வரை
நீ தான் என் உயிர் என்று
கட்டியணைத்து முத்தம் தந்து
என் முகத்தால் உன் முகம் துடைத்து நான்!
தத்தி தத்தி நடக்கையில்
தடுக்கி விழாமல் தாங்கி பிடித்து நான்!
அம்மா என்ற ஒற்றை வார்த்தைக்காக
அன்பை சுமந்து இரவும் பகலாய்
ஓடி உழைக்கும் உன்னத பிறவி நான்!
நான் பார்க்காத உலகத்தை
நீ பார்க்க வேண்டும் என கனவு கண்டு
கனவு நினைவாக கடும் முயற்சி செய்பவள் நான்!
தாய்மை வரம்! தாயை பாதுகாப்போம்!
தரணியை வெல்வோம்!
நன்றி - இளவரசி
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 تعليقات